தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரதிபலிப்பாக மின்னியல் நூல்நிலையம் திகழ்கிறது.

மின்னியல் நூல்நிலைய வாசிப்பு அறை

நூல் நிலையம் என்றாலே நமது நினைவுக்கு வருவது பல் வகையான புத்தகங்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டிருப்பதாகும். எனினும் பினாங்கு மின்னியல் நூல்நிலையத்தில் கால் பதித்தவுடன் ஒரு புத்தகம் கூட நமது கண் எதிரில் அகப்படாது.
இந்த நூல்நிலையம் தொழில்நுட்பம் சார்ந்த மின்னியல் மூலமாக வருகையாளர்கள் புத்தகம் அல்லது சஞ்சிகைகள் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பயன்பாடு வருகையாளர்களுக்கு புதிய அனுபவம் வழங்கும் என்பது திண்ணம்
பினாங்கு மாநில முதல் மின்னியல் நூல்நிலையம் மாநில அரசின் முயற்சியில் கீய்சய்ட் தொழில்நுட்ப நிறுவனம், இ&ஒ நிறுவனம் மற்றும் டைம் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டது.
3000-க்கும் மேற்பட்ட மின்-புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகை குறிப்புகள் இடம்பெறும் இப்புதிய மின்னியல் நூல்நிலையத்தில் இளைய தலைமுறையினரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
தாமான் பிரி ஸ்கூல் அருகில் இருக்கும் மிக பழமையான புஸ்பானிதா கட்டிடத்தை மின்னியல் நூல்நிலையமாக மாற்றியமைக்க இப்புதிய திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்த மாநில அரசு ரிம2.5 லட்சம் செலவிட்டது.

கலந்துரையாடல் அல்லது சந்திப்புக்கூட்டம் இடம்பெற 58′ தொலைக்காட்சி மற்றும் ஒளிப்படக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்ட தொழிற்துறை மின்சாரம், உற்பத்தி திறன், இணையம் மற்றும் கணினி சார்ந்த இயந்திரமயமாக்கலின் பிரதிபலிப்பாக அமைகிறது. எனவே பினாங்கு மாநிலம் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரதிபலிப்பாக மின்னியல் நூல்நிலையம் திகழ்கிறது. இதன்வழி, பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிரகடனப்படுத்த முடியும் என்பது வெள்ளிடைமலை. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கத்தில் கட்டப்பட்ட இந்நூல்நிலையம் இளைய தலைமுறையினரிடையே கற்கும் ஆற்றலை மேலோங்க ஊந்து கோளாக அமையும்.
இதுவரை 1,650 பங்கேற்பாளர்கள் மின்னியல் நூல்நிலையத்தின் உறுப்பினராகப் பதிவுப்பெற்றுள்ளனர். இந்த நூல்நிலையம் தினமும் காலை மணி 10.00 முதல் இரவு மணி 10.00 வரை பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும். மேல் விபரங்களுக்கு [email protected] அல்லது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி www.penangdigitallibrary.com தொடர்புக் கொள்ளலாம். . பொது மக்கள் குறிப்பிடப்பட்டுள்ள “No. 35, Jalan Masjid Negeri, 11600 George Town, Pulau Pinang” எனும் முகவரியில் அமைந்திருக்கும் மின்னியல் நூல்நியத்திற்கு வரவேற்கப்படுகின்றன.


Comments are closed.Latest Articles

Like Our Facebook Page

Download Buletin Mutiara

Twitter

Buletin Mutiara Videos

Recent Comments

No comments

Archives