அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவீர்.

Admin
பொருட்களை தனிமைப்படுத்தும் முறை பற்றி விளக்கமளிக்கப்படுகிறது
பொருட்களை தனிமைப்படுத்தும் முறை பற்றி விளக்கமளிக்கப்படுகிறது

பினாங்கு மாநிலத்தை மாசற்ற பசுமையாக மாற்றியமைக்கும் முயற்சியில் அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டம் (Majlis Pelancaran Projek Perintis Dasar Pengasingan Sisa di Punca) கடந்த ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கியது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரிக்கு 1,700டன் குப்பைகள் புலாவ் பூரோங்கில் அகற்றப்படுகிறது. இதனை குறைக்கும் நோக்கில் மாநில அரசு இப்புதிய திட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டஅமலாக்கம் குறித்து இன்னும் பல தரப்பினர் இடையே விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர். நாம் அன்றாட தேவைகளின் வழி அகற்றும் குப்பைகளை தத்தம் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்க வேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதம், நெகிழி, அலுமினிய டின்கள் முதல் பிரிவாகவும் இதர குப்பைகள், மிஞ்சிய உணவுகள் அனைத்து இரண்டாம் பிரிவாக கணக்கிடப்படும். எனவே, பினாங்கு வாழ் மக்கள் இப்பிரிவுகளை நினைவில் கொண்டு அதன்படி குப்பைகளை வீசும்படி பரிந்துரைக்கப்படுகின்றனர் .

அடிப்படை பொருட்களில் இருந்து தனிமைப்படுத்திய கழிவுகளை பினாங்கு மாநகர் கழக ஊழியர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.
அடிப்படை பொருட்களில் இருந்து தனிமைப்படுத்திய கழிவுகளை பினாங்கு மாநகர் கழக ஊழியர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

இம்மாதிரியான திட்டத்தின் வழி, புவி வெப்பமடைதலை குறைக்க முடியும் என்பதையும் பினாங்கு மாநிலத்தை தூய்மை, பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய மாநிலமாக மாற்றியமைக்க முடியும் என்பதோடு இரண்டு ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் மன்றம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் ஆகியவை தத்தம் ரிம100.31 லட்சமும் ரிம98.99 லட்சம் திடக் கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு நிர்வகிப்பதற்குச் செலவிடப்படும் நிதி சுமையையும் குறைக்க முடியும்.