அரசு ஊழியர்கள் தொழிற்துறை புரட்சியில் 4.0 சிறந்து விளங்க வேண்டும் – முதல்வர்

பினாங்கு அரசுத்துறை ஊழியர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள்

பினாங்கு அரசு ஊழியர்கள் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் மிகுந்த பொது அறிவு கொண்டிருப்பதன் வாயிலாக தொழிற்துறை புரட்சி 4.0 சிரந்து விளங்க முடியும் என பொதுச் சேவை ஊழியர்களுடனான சந்துப்புக் கூட்டத்தில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.

அரசுத்துறை ஊழியர்கள் தொழிற்துறை புரட்சியில் 4.0 ஆதிக்கம் கொள்வதன் மூலம் பொதுச் சேவையில் குறிப்பாக பொது மக்களுக்கு சேவை வழங்கும் முறையில் புதிய உருமாற்றம் கொண்டு வர இயலும் என்றார்.

தொழிற்துறை புரட்சியைக் கொண்டு தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு அடிப்படையிலான கணினி பயன்பாட்டில் பெரிய தரவு ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, இணையம், இணையவழி வியாபாரம் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த வீயூகங்களை அறிந்து கொள்ள முடியும்“.

தொழிற்துறை புரட்சியின் பங்களிப்பை அரசுத்துறை ஊழியர்கள் உணர்ந்து நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் எதிர்காலத்தில் பின்னோக்கி சென்று விடுவோம் என 4,000 அரசு ஊழியர் வருகையளித்த சபையில் மாநில முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழில்துறை புரட்சி பற்றிய வியூகங்களைக் கற்றுக் கொள்ள செபராங் பிறை நகராண்மைக் கழக ஊழியர்களுக்கு சிறப்பு பட்டறைகள் நடத்தப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

பினாங்கின் பொதுச்சேவை ஊழியர்கள் ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை ஆகிய கொள்கையின் அடிப்படையில் வேவையாற்றி சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், இவ்வருட்ம் அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரிம2,000 ஊக்கத்தொகை (போனஸ்) வழங்குவதாக அகம் மகிழ அறிவித்தார்.