இந்து மத நாகரீகம் வரலாறு & பாரம்பரிய கண்காட்சி விழா

ஶ்ரீ ஶ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம்
ஶ்ரீ ஶ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம்

அனைத்துலக கிருஷ்ணா புரிந்துணர்வு சங்க ஏற்பாட்டில் முதல் முறையாக பினாங்கில் இந்து மத நாகரீக வரலாறு & பாரம்பரிய கண்காட்சி விழா செபராங் பிறை பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறும்.

இந்தக் கண்காட்சி விழா மலேசியாவில் பறைச்சாற்றும் இந்து மத வரலாற்றினை புஜாங் பள்ளத்தாக்கு, கெடா துவா, லங்காசுகா, தென்கிழக்கு ஆசிய கம்போடியா(அங்கோர் வாட்), பிராம்பன் (இந்தோனேசியா), மற்றும் சீனா, கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் எகிப்து போன்ற உலக நாடுகளில் இந்து மதம் வரலாறு இடம்பெறும் .
“இந்து மத நாகரீகம் & பாரம்பரிய கண்காட்சி” எனும் தலைப்பில் இந்து மத பதிவுகள் இடம்பெற்றுள்ள கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல், உலோகம், வானியல், மொழியியல், கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத் துறைகள் பங்களிப்பு பதிவுகள் மற்றும் இந்து மதம் முனிவர்கள் மற்றும் வேதங்களின் கண்டுபிடிப்புகள் காட்டுகிறது.
மேலும் இந்து மத பங்களிப்பு, புரிதல் மற்றும் அமலாக்கம் குறித்து நிபுணத்துவம் பெற்ற பேச்சாளர்களால் உரை நிகழ்த்தப்படும். இந்தக் கண்காட்சியின் முதன்மை நோக்கமாக இந்து மதம் படைத்துள்ள அறிவியல் பங்களிப்புகளைக் குறிப்பாக தொல்லியல் துறை உண்மைகள், இந்து மத கலாச்சாரம் மற்றும் உலக இந்துக்களின் பங்களிப்புகளைச் சித்தரிக்கின்றது.

இந்து மத நாகரீகம் வரலாறு & பாரம்பரிய கண்காட்சி விழா
இந்து மத நாகரீகம் வரலாறு & பாரம்பரிய கண்காட்சி விழா

இவ்விழாவில் திறன்மிக்க மற்றும் அனைத்துலக புகழ்ப்பெற்ற பேச்சாளர்களும் வருகைப் புரிந்து சிறந்த உரை நிகழ்த்துவர். இந்நிகழ்வில் குறிப்பாக சமஸ்கிருத 29 புத்தகங்கள் மொழிபெயர்த்த ஜப்பனீஸ் துறவி மற்றும் சமஸ்கிருத பண்டிதருமான பானு சுவாமி ஸ்ரீல மற்றும் உள்ளூர் பிரபல எழுத்தாளர் டத்தோ வி.நடராஜன் மற்றும் பலர் உரையாற்றுவர்.
இந்த அற்புதமான நிகழ்வில் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்

} else {