இரட்டை மொழித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – பேராசிரியர்

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் சமூக நல இயக்கங்களுடன் இரட்டை மொழித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கல்வி அமைச்சு இரட்டை மொழித் திட்டத்தை 300 பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது. 2017-ஆம் ஆண்டு தொடங்கி 49 தமிழ்ப்பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்த கடிதம் அனுப்பட்டதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அறிவித்தார். எந்த அடிப்படையில் 49 தமிழ்ப்பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது என வினவினார் பேராசிரியர். பினாங்கில் இதுவரை 50 அரசு சாரா இயக்கங்கள் இரட்டை மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2002-ஆம் ஆண்டு கல்வி அமைச்சு அறிமுகப்படுத்திய கணிதம் மற்றும் அறிவியல் பாடம் ஆங்கில மொழியில் கற்றல் & கற்பித்தல் திட்டம் இறுதியில் தோல்வியைத் தழுவியது என எடுத்துரைத்தார். அனைத்துலக கணிதம் மற்றும் அறிவியல் கல்வித்திட்ட2007 ஆய்வின் படி கணிதம் பாடத்தில் 474 புள்ளிகள்(2007) அதேவேளையில் 2003-ஆம் ஆண்டு 503 புள்ளிகள் பெறப்பட்டது. மேலும் அறிவியல் பாடத்தில் 2003-ஆம் 503 புள்ளிகள் பெறப்பட்ட நிலையில் 471 புள்ளிகள் (2007) மட்டுமே பெறப்பட்டது என்றார். எனவே, 2012-ஆம் ஆண்டு இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.
மலேசிய கல்வித் திட்டத்தில் இரட்டை மொழித் திட்டம் வரவேற்கக்கூடியது அல்ல என பேராசிரியர் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை மேன்மையடைந்து வரும் நிலையில் இரட்டை மொழித் திட்டம், பாதிப்பைக் கொண்டு வரலாம் என அச்சம் நிலவுகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் கற்றல் & கற்பித்தலில் தமிழ் மொழியின் பயன்பாடு குன்றிவிடும்.
ஐக்கிய சீனப்பள்ளிக் குழுக்கள் சங்கம் (டொங் சொங்) மற்றும் 6 சீன இயக்கங்கள் ஒன்றிணைந்து இரட்டை மொழித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் அமல்படுத்துவதன் மூலம் தமிழ்மொழியின் பாரம்பரிய கல்வி மறைந்துவிடக்கூடும்.
மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித வளம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆட்சிக்குழு உறுப்பினராகத் திகழும் பேராசிரியர் கல்வி அமைச்சு மாணவர்களிடையே ஆங்கில மொழி ஆதிக்கத்தை மேம்படுத்த பல அரிய திட்டங்கள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.}