உஜோங் பத்து பகுதியில் 600 மலிவு விலை வீடுகள் கட்டப்படும் – முதல்வர்

மாநில முதல்வருடன் ரொஸ்லி ஜாபார், மற்றும் பீ புன் போ   உஜோங் பத்து வீடமைப்புத் திட்ட வரைப்படத்தைப் பார்வையிடுகின்றனர்.
மாநில முதல்வருடன் ரொஸ்லி ஜாபார், மற்றும் பீ புன் போ உஜோங் பத்து வீடமைப்புத் திட்ட வரைப்படத்தைப் பார்வையிடுகின்றனர்.

பினாங்கு மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பாகான் டாலாம் தொகுதியில் அமைந்துள்ள உஜோங் பத்து பகுதியில் 600 மலிவு விலை வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பொது வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள மேம்பாட்டாளர்கள் திறந்து குத்தகை முறையில் வரும் 23 ஆகஸ்டு முதல் 24 அக்டோபர் வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் வருகின்ற 5 முதல் 10 ஆண்டுகளில் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்ட 26,000 குறைந்த விலை, நடுத்தர விலை மற்றும் மலிவு விலை வீடுகள் கட்டும் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு அங்கமாக விளங்குகிறது.
மாநில அரசாங்கம் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளவில்லை என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளிலிருந்து இத்திட்ட அறிமுகம் தவிர்க்கிறது என்றார் நாடாளுமன்ற உறுப்பினருமான குவான் எங்.
இந்நிகழ்வில் சமூகநலன் & சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ மற்றும் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழிற்துறை, கிராம மேம்பாடு மற்றும் ஆரோக்கிய சேவை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அபிப் பஹாருடின் கலந்து கொண்டனர்
இந்த வீடமைப்புத் திட்டம் 13.325 ஏக்கர் நிலப்பரப்பில் , அதாவது 99 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தத்தில் மாநில முதல்வர் வாரியத்திடமிருந்து பெறுப்படுவதாக மேம்பாட்டுக் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரொஸ்லி ஜாபார் கூறினார். இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் 650அடி அளவில் வீடுக் கட்டுவதோடு பல பொது வசதி திட்டங்களும் இடம்பெறுகின்றன. இதில் பூப்பந்து மைதானத்தை மையமாகக் கொண்ட பொது மண்டபம் செபராங் பிறை நகராண்மைக் கழக ஒத்துழைப்புடன் கட்டப்படும் என்றார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);