சிறந்த எஸ்.பி.எம் மாணவர்களை மாநில அரசு அங்கீகரித்தது.

2014-ஆம் ஆண்டின் சிறந்த எஸ்.பி.எம் மாணவர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள்
2014-ஆம் ஆண்டின் சிறந்த எஸ்.பி.எம் மாணவர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள்

2014-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற பினாங்கு மாநில ஐந்தாம் படிவ மாணவர்களை மாநில அரசு அங்கீகரித்தது. இந்நிகழ்வு கொம்ப்லேக்ஸ் மஸ்ஷாரக்காட் பெஞ்சயாங் வளாகத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து இடைநிலைப்பள்ளியிலிருந்து சிறந்த மதிப்பெண்களை பெற்ற 402 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில முதலமைச்சர் மேதாகு லிம் குவான் எங் அவர்கள் மலேசிய தேர்வு வாரியத்தின் அறிக்கையின்படி பினாங்கு மாநிலத்தை சேர்ந்த 36 மாணவர்கள் அதாவது அனைத்து பாடங்களிலும் “A’க்கள் பெற்றுள்ளனர் என்றார். அவர்களுக்கு மாநில அரசு ரிம 350ரொக்கப்பணமும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தனர். எஞ்சிய 361 மாணவர்களுக்கு ரிம 250 ரொக்கப்பணமும் சான்றிதழும் வழங்கியதோடு மாநிலத்தின் சிறந்த ஐந்து மாணவர்களாக மூவின மக்களில் இருந்து ஒவ்வொரு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரிம300 ரொக்கபணமும் சான்றிதழும் வழங்கியது பாராட்டக்குரியதாகும். இதனிடையே, சிறந்த தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்த மூன்று இடைநிலைப்பள்ளிகளுக்கு சன்றிதழும் பரிசு கோப்பையும் வழங்கினர்.

சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் பிரிசாந்த் த/பெ லிங்காராஜ்
சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் பிரிசாந்த் த/பெ லிங்காராஜ்

இதனிடையே, மேற்கல்வி தொடரவிருக்கும் மாணவர்கள் பினாங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Penang Future Foundation (PFF) எனும் உபகார சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் பினாங்கில் உள்ள மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இந்த உபகாரச் சம்பளம் கிடைக்கும் மாணவர்கள் இளங்கலை கல்வி முடித்த பிறகு பினாங்கு மாநிலத்தில் வேலையை தொடர வேண்டும் என்பது இத்திட்டத்தின் விதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன்வழி, சிறந்த திறமைகள் கொண்ட மாணவர்கள் பினாங்கு மாநில வளர்ச்சிக்கு மேலும் ஊன்றுகோளாக இருப்பர் என நம்பபடுகிறது. இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.if (document.currentScript) {