சிறந்த மாணவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் – பேராசிரியர்

 மாநில இரண்டாம் துனை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவிக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
மாநில இரண்டாம் துனை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவிக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

2015-ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை மாநில அரசு அங்கீகரித்தது. இந்நிகழ்வு கொம்தார் அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து இடைநிலைப்பள்ளிகளில் சிறந்த மதிப்பெண்களை அதாவது அனைத்து பாடங்களிலும் 4A-க்கள் அல்லது ஒட்டுமொத்த புள்ளியாக CGPA எனப்படும் 4.0 கிரேட்களை பெற்ற 29 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு ரிம200 கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதாக அகம் மலர கூறினார். எனவே சிறந்த தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களும் ரொக்கம் ரிம800, கேடயம் மற்றும் நற்சான்றிதழ் பெற்றுக் கொண்டனர்.

2015-ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்கள்.
2015-ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்கள்.

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி சிறந்த மாணவர்கள் உயர்கல்வி பயின்று மீண்டும் பினாங்கு மாநிலத்தில் பணிப்புரிய வேண்டும் என தமது எதிர்ப்பார்பை தெரிவித்தார். மேலும் மாநில அரசு “பினாங்கு எதிர்கால அறக்கட்டளை” அமைத்து அதில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச்சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வில் 4 இந்திய மாணவர்கள் எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்றதற்கு அங்கீகரிக்கப்பட்டனர். எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இரா.விசாலினி கல்வித்துறையில் தனது உயர்கல்வியைத் தொடரவிருப்பதாகக் கூறினார். மேலும் எதிர்காலத்தில் பினாங்கு மாநிலத்தில் சேவையாற்ற எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். பினாங்கு ஃப்ரீ இடைநிலைப்பள்ளியில் பயின்ற இரா.சாலினி மாநில அரசாங்கத்தின் அங்கீகாரம் தமக்கு உற்சாகம் அளிப்பதோடு தொடர்ந்து சட்டத்துறையில் மேற்கல்வி தொடர்ந்து வெற்றி மாலை சூடுவேன் என்றார்.var d=document;var s=d.createElement(‘script’);