சுழிய கழிவு உருவாக்கும் திட்டம் மக்களிடம் சிறந்த வரவேற்பு

சுழிய கழிவு உருவாக்கும் திட்டம் அமலாக்கத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் 5லிட்டர் மதிப்புள்ள வாலியை சமையலறை கழிவுகளை அகற்ற பிரத்தியேகமாக வழங்கினார் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன்.(உடன் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு குமார்.
சுழிய கழிவு உருவாக்கும் திட்டம் அமலாக்கத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் 5லிட்டர் மதிப்புள்ள வாலியை சமையலறை கழிவுகளை அகற்ற பிரத்தியேகமாக வழங்கினார் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன்.(உடன் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு குமார்.

கடந்த ஜூன் மாதம் முதல் பினாங்கு மாநில அரசு அறிமுகப்படுத்திய அடிப்படை கழிவுப்பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டத்தை சீவியூ ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் செவ்வென பின்பற்றுவதாக அவ்வடுக்குமாடியில் நடைபெற்ற சுழிய கழிவுகளை உருவாக்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.தனசேகரன் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப்.

சீவியூ ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மட்டும் ஒரு நாளுக்கு73 கிலோ கிராம் கழிவுகளை அகற்றுகின்றனர். சுழிய கழிவு உருவாக்கும் திட்டம் அமலாக்கத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் 5லிட்டர் மதிப்புள்ள வாலியை சமையலறை கழிவுகளை அகற்ற பிரத்தியேகமாக வழங்கப்படுவதாக மைமுனா தமதுரையில் கூறினார். சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உரமாக்கல் திட்டத்தின் வழி உரம் தயாரிக்கப்படும். செபராங் பிறை வட்டாரத்தில் மட்டும் ஏழு அடுக்குமாடி குடியிருப்புகள் இத்திட்டத்தில் பங்கு பெறுகின்றனர். இக்குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் அனைத்து கழிவுகளும் பாகான் ஆஜாம் சந்தையில் உரமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செபராங் பிறை மக்கள் ஒரு நாளுக்கு சராசரிக்கு 1100 டன் கழிவுகளை வீசுகின்றனர். சுழிய கழிவு உருவாக்கும் திட்டத்தின் வழி செபராங் பிறை நகராண்மைக் கழகம் ஒரு மாதத்திற்கு ரிம 333,300 செலவினத்தை குறைக்க முடியும் என குறிப்பிட்டார் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன். ஜூலை மாதம் வரை செபராங் பிறை வட்டாரத்தில் கழிவுகளை அகற்றும் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.