செலுத்திய மலிவு விலை வீடுகளின் மதிப்பீடு வரி திரும்ப பெறலாம் – முதல்வர்

Admin
பாயா தொருபோங் குடியிருப்பாளர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பாயா தொருபோங் குடியிருப்பாளர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

பினாங்கு மாநில அரசு 2016-ஆம் ஆண்டு வரவுச்செலவு திட்டத்தை சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்தப்போது இவ்வாண்டுக்கான ஊராட்சி மன்றங்களுக்குச் செலுத்த வேண்டிய மதிப்பீடு வரியை மாநில அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.. அதிகரித்து வரும் செலவினங்களின் சுமையை குறைக்கும் நோக்கத்தில் மாநில அரசு குறைந்த வருமானம் பெறும் மலிவு விலை குடியிருப்பாளர்களுக்கு இச்சலுகையை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனை அறியாமல் இவ்வாண்டுக்கான கட்டணத்தை செலுத்திய பொதுமக்கள் அப்பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என பாயா தெருபோங் அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநகர் கழகம் இவ்விவகாரம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கூடிய விரைவில் மலிவு விலை வீடமைப்பாளர்களின் கட்டணமாக செலுத்திய மதிப்பீடு வரியை திரும்ப வழங்குமாறு கட்டளையிட்டார்.