டத்தோ கெராமாட் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.

படம் 1: பள்ளி எழுதுகோல்களுக்கான பற்று சீட்டு பெற்று கொண்ட மாணவர்களுடன் அரசியல் தலைவர்கள்.
படம் 1: பள்ளி எழுதுகோல்களுக்கான பற்று சீட்டு பெற்று கொண்ட மாணவர்களுடன் அரசியல் தலைவர்கள்.

டத்தோ கெராமாட் சட்டமன்ற தொகுதியின் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழகமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பள்ளி எழுதுகோல்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டு வழங்கியது. இதனை சிறப்பாக எடுத்து வழங்கினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. இந்நிகழ்வு kompleks masyarakat penyayang பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. டத்தோ கெராமாட் பகுதியில் இயங்கும் சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழகமும் இணைந்து அவ்வட்டாரத்தில் வாழும் வசதி குறைந்த மாணவர்களை அடையாளங்கண்டு இப்பற்றுச்சீட்டுகளை வழங்கினர். இதனிடையே, கடந்தாண்டு அரசாங்க தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டனர்.

இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு பள்ளி பள்ளி எழுதுகோல்களுக்கான பற்றுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் ரிம50-க்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது பாராட்டக்குறியதாகும். வரும் காலங்களிலும் இத்திட்டம் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கப்படும் என தமது உரையில் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் அவர்கள். பெற்றோர்கள் பினாங்கில் உள்ள போபுலர் (Popular) பேரங்காடியில் பள்ளி எழுதுகோல்களை இப்பற்றுச்சீட்டு கொண்டு வாங்கி கொள்ளலாம். அதோடு, கடந்தாண்டு தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 294 மாணவர்களுக்கு ரிம 50-க்கான பற்றுச்சீட்டு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பு செய்தனர்.

படம் 2: நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.
படம் 2: நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இப்பற்றுச்சீட்டு வழங்கிய திரு.ஜெக்டிப் சிங் டியோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர். இவ்வுதவி தமக்கு பெருமளவில் துணை புரியும் என்றனர். இந்நிகழ்வில் மேலும் புக்கிட் குளுகோர் ஆட்சிக்குழு உறுப்பினர் ராம் கர்பால் சிங், ஜெளுதோங் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேஃப் ஊய், மற்றும் தஞ்சோங் ஆட்சிக்குழு உறுப்பினர் எங் வேய் அய்க் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.