டிசைன் வில்லேஜ் பேரங்காடி சுற்றுப்பயணிகளின் சிறந்த தேர்வு

சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரயில் சேவை

அண்மையில் பத்து காவான் பண்டார் காசியாவில் டிசைன் வில்லேஜ் பேரங்காடி அனைத்துலக ரீதியில் சிறந்த பேரங்காடியாக திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என அப்பேரங்காடியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.
பேரா, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு பகுதியில் வாழும் 5 கோடி மக்களுக்கு இப்பேரங்காடி சிறந்த தேர்வாக அமையும் என்பது வெள்ளிடைமலை. அனைவரின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கவும் குடும்பத்தினருடன் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடவும் இப்பேரங்காடி சிறந்த தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட முத்திரை பதித்த ஆடை ஆபரணங்கள், காலணிகள், அழகுசாதன பொருட்கள், என இன்னும் பலவித பொருட்களை தரமான விலையில் வாங்க முடியும். ஒவ்வொரு கடைகளுக்கு செல்வதற்கு முன்பு இயற்கையை கண்டு வியக்கும் வகையில் அதன் சுற்றுச்சுழல் அமைப்பு மிக பிரமாண்டமான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயோதினருக்கும் ஏற்ற வகையில் சிறந்த சுற்றுலாத் தளமாக இவ்விடம் அமையும்.

டிசைன் வில்லேஜ் பேரங்காடி வெளித்தோற்றம்

இப்பேரங்காடி திறப்பின் மூலம் 1,000 வேலை வாய்ப்புகள் அவ்வட்டாரத்தில் வாழும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. அதோடு, பினாங்கு அனைத்துலக விமான நிலையம் செல்ல 30 நிமிடமும் மற்றும் ஜோர்ஜ்டவுன் பாரம்பரிய தளத்திற்கு 40 நிமிடத்திலும் சென்று சேர முடியும். இதனிடையே, பத்து காவான் பகுதியில் எகோ சிட்டி, பரமாவுன்ட், ஐக்கிய மற்றும் எஸ்பேன் போன்ற முதலீட்டாளர்களின் வருகை அவ்வட்டாரத்தை வளர்ச்சியடைந்த அறிவார்ந்த நகரமாக பிரகடனப்படுத்த இயலும் என்பது வெள்ளிடைமலை.}