“டி” கொம்தார் குழந்தைப் பராமரிப்பு மைய அன்னையர் தினக் கொண்டாட்டம்

Admin

தயாரிப்பு : குமாரி பர்வீன் கௌர் : திட்ட அதிகாரி (குழந்தைப் பராமரிப்பு பிரிவு) பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம்

தமிழில் மொழிப் பெயர்த்தவர் : குமாரி வே. இன்பஜோதி

ஜொர்ஜ்டவுன் – கடந்த 15 மே பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் “டி” கொம்தார் குழந்தைப் பராமரிப்பு மையம் குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் அன்னையர் தினக் கொண்டாட்டத்தை மிக சிறப்பாகக் கொண்டாடியது.

குழந்தைகளுடன் தாய்மார்கள் “இசை நாற்காலி” விளையாடுகின்றனர்..
குழந்தைகளுடன் தாய்மார்கள் “இசை நாற்காலி” விளையாடுகின்றனர்..

இந்நிகழ்வு, குழந்தைகளும் மற்றும் தாய்மார்களும் இணைந்து விளையாடும் “இசை நாற்காலி”யுடன் தொடங்கியது. தொடர்ந்து அன்னையர் தின சிறப்பு பாடலுடன் கேக் வெட்டப்பட்டது. வருகைப் புரிந்த அனைத்து விருந்தினரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு விருந்தில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் நிறைவாக, குழந்தைகள் தங்கள் கைத்திறனால் செய்த பொருட்களை தங்களின் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்து பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் “டி” கொம்தார் குழந்தை பராமரிப்பு மைய அன்னையர் தினக் கொண்டாட்டத்தை சிறப்பிக்க பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக பாலின பொறுப்பு மற்றும் பட்ஜெட் திட்ட இயக்குநர் திருமதி அலோயா பக்காரும் , மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் தலைமைத்துவம் (சிறுவர் பராமரிப்பு) திட்ட அதிகாரி குமாரி உயி ஐ லின்னும் கலந்து சிறப்பித்தனர். “டி” கொம்தார் குழந்தை பராமரிப்பு மையம் பினாங்கு மாநில அரசின் முயற்சியால் அமைக்கப்பட்டு பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ்ச் செயல்பட்டு வருகிறது. சிறுவர் பராமரிப்புக் கொள்கை மற்றும் செயல் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு மலிவான மற்றும் தரமானக் குழந்தை பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது. இதன் வழி பெண் தொழிலாளர்கள் தொழிலில் தொடர்ந்து சேவையாற்ற வழிவகுக்கும்.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அனிச்சல் உண்ணுவதைப் படத்தில் காணலாம்
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அனிச்சல் உண்ணுவதைப் படத்தில் காணலாம்