தங்க இரத நன்கொடை மாணவர்களின் கல்வி நிதியுதவிக்கு வழங்கப்படும் – பேராசிரியர்

இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உண்டியல் கணக்கை காண்பிக்கிறார்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இவ்வாண்டு ரி210,696.50 நிதித்திரட்டப்பட்டதோடு 183.81 கிராம் எடைக்கொண்ட தங்கம் காணிக்கையாகச் செலுத்தப்பட்டது. இதனிடையே இவ்வாண்டு சரித்திரம் படைத்த தங்க இரதம் ஊர்வலத்திலிருந்து ரிம160,097.00 மற்றும் 40கிராம் எடைக்கொண்ட தங்கமும் காணிக்கையாக பெறப்பட்டது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி.

இந்த ஆண்டு உண்டியல் காணிக்கை எண்ணப்படுவதை முகநூல் வாயிலாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. தங்க இதர ஊர்வலத்தில் பெறப்பட்ட இத்தொகை இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரம் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும் என மேலும் விவரித்தார்.

இந்நிகழ்வில் இந்து அறப்பணி வாரியத் தலைவர் திரு இராமசந்திரன், செயலாளர் திரு சுரேந்திரன், பால தண்டாயுதபாணி ஆலயத் தலைவர் திரு சுப்பிரமணியம் மற்றும் இந்து அறப்பணி வாரிய ஆணையர் திரு குவனராஜு கலந்து கொண்டனர்.