தற்காப்பு கலைகளை காத்திடுவோம் – பேராசிரியர்

டேக்வாண்டோ  போட்டியில் கலந்து கொண்ட  மாணவர்கள்.
டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்.

இளைய தலைமுறைக்குத் தற்காப்பு கலைகளின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு மேம்படுத்தும் பொருட்டு 25-வது முறையாக வட செபராங் பிறை டேக்வாண்டோ (Taekwando) கழகத்தின் ஏற்பாட்டில் பினாங்கு மாநில அரசு ஆதரவோடும் பெர்தாம் மைடின் பல்பொருள் பேரங்காடியில் டேக்வாண்டோ தற்காப்பு கலை போட்டி இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலவர் பேராசிரியர் ப.இராமசாமி.
இப்போட்டியில் 340-க்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் இலை மறை காயாக இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழாவில் பினாங்கு, பெர்லிஸ், பேராக் மற்றும் கெடாவிலிருந்தும் மாணவர்கள் நட்புப் போட்டிக்காக களமிறங்கினர். இப்போட்டியில் வெற்றிப் பெற்ற பேராக் மாநில டேக்வாண்டோ கழகத்தினருக்குச் சுழற்கிண்னத்தை எடுத்து வழங்கினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் தைரியமும் தன்னம்பிக்கையும் மாணவர்களிடையே மேலோங்கும் என இப்போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். இதனிடையே, மறைந்து வரும் இம்மாதிரியான தற்காப்பு கலைகள் காக்கப்பட வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.
நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மூவின மாணவர்களும் கலந்து கொண்டது தமக்கு பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார் ஏற்பாட்டுக் குழுவினர் மாஸ்டர் முகமது சாபிப். பெற்றோர்களின் ஆதரவு டேக்வாண்டோ போட்டி நடத்த தமக்கு ஊக்கமளிப்பதாக மேலும் விவரித்தார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);