தாமான் செஞ்சுரி அடுக்குமாடியில் சாயம் பூசும் திட்டம் தொடக்க விழாக் கண்டது

program cat semula batu uban

பிளாக் 38, சாயம் பூசும் துவக்க விழாவில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள்.

24 ஆண்டுகளாக பத்து உபான் பகுதியில் அமைந்துள்ள தாமான் செஞ்சுரி அடுக்குமாடி பிளாக் 38 குடியிருப்பில் சாயம் பூசாமல் காணப்பட்டது. பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி சின் வருகின்ற மார்ச் 1-ஆம் திகதி தொடங்கி சாயம் பூசும் பணி தொடங்கப்படும் என்றார். மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா சாலைக் கடந்து செல்லும் வழியில் இந்த அடுக்குமாடி குடியிருப்பைப் பார்வையிட்டதாகவும் உடனடியாக சாயம் பூசும் பணி தொடங்கப் வேண்டும் எனக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தாமான் செஞ்சுரி அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் பூசும் பணித் தொடக்க விழாவில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயபாலன், மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் மேற்கொள்ள மாநில அரசு ரிம70,600 , பிளாக் 38 பராமரிப்பு வாரியம் ரிம30,000 , பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயபாலன் ரிம 20,000 , பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி சின் ரிம16,500 மற்றும் பந்தாய் ஜெர்ஜாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் ரிம16,500 வழங்கினர். மாநில அரசாங்கம் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்றும் உத்வேசிக்கும்.