நம்பிக்கை கூட்டணி அரசு மலேசியாவை கைப்பற்றினால் ஜி.எஸ்.தி அகற்றப்படும் – முதல்வர்

Admin
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ஜி.எஸ்.தி குறித்த நாளிதழ் செய்தியைக் காண்பிக்கிறார்

நம்பிக்கை கூட்டணி அரசு வருகின்ற பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அடுத்த 100 நாட்களுக்குள் பொது மக்களுக்குச் சிரமத்தை அளிக்கும் பொருள் சேவை வரி (ஜி.எஸ்.தி) அகற்றப்படும் என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வாக்குறுதியளித்தார்.

ஜி.எஸ்.தி விதிக்கப்படுவதால் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்பதை இன்று வரை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ அகமது மஸ்லான் கூறுயது போல தேசிய முன்னணி அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியவில்லை.

சீனார் ஹரியான் நாளிதழில் (20/2/1018) வெளியிடப்பட்ட செய்தியில் கடந்த ஏழு ஆண்டுகளில் பொருட்களின் விலை தொடர்ந்து விலையேற்றம் காண்பதாகவும் குறைந்தபட்சம் ரிம100 இருந்து ரிம130-ஆக உயர்ந்துள்ளதாக மலேசிய புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் அகமது ரஸ்மான் லதீப் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 14-வது பொதுத் தேர்தலில் அனைத்து தரப்பினரும் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களுக்கு நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரவு நல்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.

மைடின் ஹொல்டிங்ஸ் சென். பெர்ஹாட் நிறுவன நிர்வாக இயக்குநரான டத்தோ அமீர் அலி மைடின் 50% மளிகை பொருட்களை மையமாகக் கொண்டு செயல்படும் பேரங்காடிகளின் வியாப்பாரத்தில் சரிவு நிலை ஏற்படுவதாக இணையத்தள செய்தியில் தெரிவித்துள்ளார்.

உள்நஅட்டு உற்பத்தி விகிதம் கடந்த 2017-ஆம் ஆண்டு 5.9% என்ற போதிலும் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிகரிப்பதால் சில்லரை வியாபாரத்தில் சரிவுக் கண்டுள்ளது.

ஜி.எஸ்.தி அறிமுகத்தால் குறைந்த வருமானம் பெறுவோர் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கப்பட்டு பணவீக்கத்தை அனுபவிக்க நேரிடுகிறது என ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் கூறினார்

.