பினாங்கு அனைத்துலக நீச்சல், மிதிவோட்டம் மற்றும் நெடுவோட்டப் போட்டி பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு

பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஒட்டப் போட்டிகள் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல, இவ்வாண்டு மீண்டும் மலர்ந்துள்ளது நீச்சல், மிதிவோட்டம் மற்றும் நெடுவோட்டம் என தொடர்ந்தார்போல நடைப்பெறும் மூவகை போட்டி(TRIATHLON). இதனை பினாங்கு மாநில நகராண்மைக் கழகமும் பினாங்கு ஜி மிதிவண்டி குழுவினரும் இணைந்து நடத்துகின்றனர். இப்போட்டி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. நீச்சல் போட்டியின் போது ஜெல்லி மீன் தாக்குதலால் போட்டியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதால்  இந்நிகழ்வு கைவிடப்பட்டது. ஏனினும், 2012-ஆம் ஆண்டு கடலின் குறிப்பிட்டப்பகுதியில் வலை கட்டப்பட்டு  பாதுகாப்புடன் இவ்விளையாட்டுப் போட்டி மீண்டும் நடத்தப்பட்டு வெற்றி கண்டது. எனவே, இவ்வாண்டும் இப்போட்டியை பலத்த பாதுகாப்புடன் நடத்துவதாக அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் பிரிவாக தொடர்தாற்போல் நடைபெறும் மூவகை போட்டியான நீச்சல், மிதிவோட்டம் மற்றும் நெடுவோட்டம் ஆகும். போட்டியாளர்கள் பத்து பிரிங்கியில் 1.5கீ.மி நீச்சல் அடித்தப் பின்பு பாலிக் புலாவில் 40கீ.மி மிதிவண்டி ஓட்டி இறுதியாக கம்போங் தெலோக் பஹாங்கில் 10கீ.மி நெடுவோட்டம் ஓட வேண்டும். இரண்டாம் பிரிவாக இருவகை போட்டி (DUATHLON) நடைபெறும். இதில் போட்டியாளர்கள் கம்போங் தெலோக் பஹாங்கில் 5.5கீ.மி நெடுவோட்டம் ஓடி பின்னர் 40கீ.மி மிதிவண்டி ஓட்டி இறுதியாக 10கீ.மி நெடுவோட்டம் ஓட வேண்டும். மூவகை போட்டிக்கு ரிம180 இருவகை போட்டிக்கு ரி.ம150 கட்டணமாக வசூலிக்கப்படும். இப்போட்டிக்கான விண்ணப்பம் 9-12-2013 முதல் 9-1-2014 வரை www.howei.com/event என்ற அகப்பக்கத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.

படம்: பினாங்கு அனைத்துலக நீச்சல், மிதியோட்டம் மற்றும் நெடுவோட்ட பிரசூரத்துடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.
படம்: பினாங்கு அனைத்துலக நீச்சல், மிதியோட்டம் மற்றும் நெடுவோட்ட பிரசூரத்துடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.

பினாங்கு அனைத்துலக நீச்சல், மிதிவோட்டம் மற்றும் நெடுவோட்டம் போட்டியில் இவ்வாண்டு 1000 பேர் கலந்து கொள்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர். இப்போட்டி வரும் 23 மார்ச் 2014-ஆம் திகதி பந்தாய் ஜுபிலி பத்து பிரிங்கியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் விவரங்களுக்கு போட்டியாளர்கள் www.penangtri.com என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.