பினாங்கு & செபராங் பிறை நகராண்மைக் கழக கவுன்சலர்களுக்கு சிறப்பு பட்டறை

பினாங்கு மாநகர் கழக மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர்கள் (நடுவில்) திருமதி கலா, நூர் சார்வாணி & கூ , சல்மா அவர்களுடன் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி ஓங் மற்றும் “WEL” திட்ட அதிகாரி கேரன் லை

மீண்டும் ஒரு முறை ஆண் பெண் சமத்துவ ஒருமைப்பாட்டை முன்நிறுத்தி செயல்படும் பினாங்கு மாநகர் கழகம் (MBPP) மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக (MPSP) அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, பெருமிதம் கொள்கிறது. கடந்த ஜனவரி மாதம் 20 முதல் 22ஆம் திகதி வரை கவுன்சிலர்களூக்கான “KURSUS INDUKSI AHLI MAJLIS” என்னும் பயிற்சி நடத்தப்பட்டது, இந்த பயிற்சியின் நோக்கம் கவுன்சிலர்கள் பாலின அவசியத்தை உணர்ந்து முன்னேற்ற வழிக்காட்டியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விரு கழகத்தின் பாலின சமத்துவ முக்கியத்துவ ஈடுப்பாட்டினால் பாலின வழிமுறைகளை உருவாக்கவும், பெண்களுக்கு சமத்துவ ரீதியிலான தலைமைத் திட்டங்கள் மற்றும் தன்முனைப் பயிற்சித் திட்டங்கள் மூலம் முன்னேற்றம் காணவும் இயலும். பினாங்கு மாநிலம் ஒரு சிறந்த பாலின சமத்துவ மாநிலமாக அமைய இதுவே ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது. பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் இரு நகராண்மைக் கழகங்களுடன் இணைந்து சேவையாற்றுவதில் பெருமை அடைகிறது. பினாங்கு அனைவருக்கும் சிறந்த மாநிலமாக விளங்க வழிவகுக்கும்