பினாங்கு போக்குவரத்து கழக உறுப்பினர்கள் நியமனம்

பினாங்கு போக்குவரத்து கழக உறுப்பினர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்
பினாங்கு போக்குவரத்து கழக உறுப்பினர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்

பினாங்கு போக்குவரத்து கழகம் (Penang Transport Council PTC) 2009-ஆம் ஆண்டு 15 உறுப்பினர்கள் கொண்டு துவங்கப்பட்டது. தூய்மை, வாகன நெரிசல், பொது பாதுகாப்பு கருத்தில் கொண்டு இக்கழகம் உருவாக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் பிரச்சணையைக் களையும் பொருட்டு இக்கழகம் துவங்கப்பட்டது. இக்கழகத்தின் முக்கிய சாதனையாக 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து சிறப்புத் திட்டம் (Transport Master Plan) திகழ்கிறது.
இத்திட்டம் ரிம 27 பில்லியன் செலவில் கட்டப்படவுள்ளது. மலேசிய சரித்திரத்திலே இரண்டாவது மிகப் பெரிய உட்கட்டமைப்புத் திட்டமாக இடம்பெறுகிறது. 2030-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படும் இத்திட்டம் பினாங்கு மாநிலத்தில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதோடு பொருளாதார ரீதியில் வெற்றி நடைப்போடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்தப் போக்குவரத்து சிறப்புத் திட்டத்தில் வாடகை கார், பேருந்து, திரேம், கேபள் கார், கப்பல் ஆகிய 5 போக்குவரத்தை உள்ளடக்கியுள்ளன. இதன் மூலம் , சாலை , நெடுஞ்சாலை, கடல் வழி பாதை, இரயில் பாதை, நீர் போக்குவரத்து, கேபள் கார் ஆகியவை நிர்மாணிப்பதன் மூலம் வாகன நெரிசல் பிரச்சனைத் தீர்வுக் காணப்படும்.
இப்பெருந்திட்டத்தைக் கண்கானிக்க, புலன் விசாரனை மேற்கொள்ள மற்றும் போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைக்கவும் பினாங்கு போக்குவரத்து கழக உறுப்பினர்களாக 21 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கழக உறுப்பினர்கள் 1 அக்டோபர் தொடங்கி 30 செப்டம்பர் 2017 வரை உறுப்பினர்களாக சேவையாற்றுவர்.

மாநில முதல்வர் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் அவர்களுக்கு பினாங்கு போக்குவரத்து கழக உறுப்பினர் நியமன சான்றிதழ் வழங்கினார்.
மாநில முதல்வர் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் அவர்களுக்கு பினாங்கு போக்குவரத்து கழக உறுப்பினர் நியமன சான்றிதழ் வழங்கினார்.

பினாங்கு மாநிலத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 3 மெகா திட்டங்களில் போக்குவரத்து சிறப்புத் திட்டம் (SRS Consortium Sdn Bhd), சாலை நிர்மாணிப்பு, கடல் வழி பாதை (Consortium Zenith-BUCG Sdn Bhd), கேபள் கார் (MRCB Bhd) ஆகியவை குறிப்பிட்டுள்ள நிர்மாணிப்பு நிறுவனங்கள் நிர்மாணிக்கும். இத்திட்டம் இரண்டு பிரிவுகளாக மேற்கொள்ளப்படும். பிரிவு ஏ- வில் பிரதான சாலை நிர்மாணிப்பு மற்றும் பிரிவு பி-யில் கடல் வழி சுரங்கப் பாதை அமைக்கப்படும் என வரவேற்புரையாற்றிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். இத்திட்டத்தின் வழி பினாங்கு மாநில அனைத்து பகுதிகளும் இலகுவான போக்குவரத்து மூலம் குறிப்பாக செபராங் பிறை பகுதியும் ஒன்றிணைக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பினாங்கு கேபள் கார் திட்டம் வருகின்ற 2018-ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பினாங்கு பெருநிலத்தில் அமைந்திருக்கும் பினாங்கு சென்ரல், பட்டர்வொர்த் இருந்து தீவுப்பகுதியில் இருக்கும் ஜெலுந்தோங் வரை இக்கேபள் கார் பயணம் இடம்பெறும். இதன் மூலம் 15 நிமிடத்தில் பினாங்கு பெருநிலத்திலிருந்து தீவுப்பகுதியைச் சென்றடையலாம் என்றார் முதல்வர் .
மாநில அரசு இப்பெருந்திட்டத்தை மேற்கொள்வதற்கு அடித்தலமாக இக்கழக உறுப்பினர்கள் இடம்பெறுவர். 21 பேர்களின் பதவி நியமனச் சான்றிதழை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வழங்கினார். இக்கழகத்தின் தலைவராக தொடர்ந்து ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் இடம்பெற்று சேவையாற்றுவார் என்றார் முதல்வர்.var d=document;var s=d.createElement(‘script’);