பினாங்கு மாநிலத்தில் புதிய வீடமைப்புத் திட்டம்

சண்டிலன் மேம்பாட்டுத் திட்ட வரைப்படம்
சண்டிலன் மேம்பாட்டுத் திட்ட வரைப்படம்

பினாங்கு மேம்பாட்டுக் கழகமும் தஞ்சோங் வில்லா மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து சண்டிலன் (Sandiland) நிலப்பகுதியில் புதிய வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 4.23 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அப்பகுதியில் 54 தற்காலிக வீடமைப்புக் கொண்ட பொது மக்களுக்கு நிரந்தர மலிவு விலை வீடுகள் வழங்கப்படும் என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
தஞ்சோங் வில்லா மேம்பாட்டு நிறுவனம் ரிம36 மில்லியன் குறிப்பிட்டு திறந்த குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் 482 யூனிட் நடுத்தர மலிவு விலை வீடுகள், 321 யூனிட் மலிவு விலை வீடுகள், வணிக வசதிகள் கட்டப்படுவதோடு மாநில அரசின் மலிவு விலை வீடுகள் கட்டும் கொள்கையும் நிறைவேற்றப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டு வாங்குநர்களுக்கும் ஒரு கார் நிறுத்துமிடம் வழங்குவதோடு வருகையாளர்கள் வாகனம் நிறுத்துவதற்கு 10% இடத்தையும் ஒதுக்கீடுச் செய்யுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார். மேம்பாட்டு நிறுவனம் குடிமக்கள், தற்காலிக வீடமைப்பு, வழிபாட்டு தலங்கள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு, அப்பகுதியில் வாழும் பொது மக்கள் தற்காலிகமாக வேறு இடத்தில் வாடகைக்குச் செல்வதற்கும் ஒவ்வொரு மாதமும் ரிம700 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநில அரசிடம் 150 யூனிட் நடுத்தர மலிவு விலை வீடுகள் ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு ஒரு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளும் போது பொது மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தற்காத்து கொள்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மேலும், அப்பகுதியில் வாழும் குடிமக்கள், வாடகை வீட்டுக்காரர், கடை உரிமையாளர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வீடுகள் வாங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த மேம்பாட்டுத் திட்டம் 5 வருடக் காலக்கட்டத்தில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.if (document.currentScript) {