பினாங்கு மாநில அளவிலானப் பசுமை பள்ளி விருது போட்டி 2015

பினாங்கு மாநில அளவிலானப் பசுமை பள்ளி விருது 2015-க்கான விளக்கக் கூட்டம் கடந்த 8 ஏப்ரல் 2015-ஆம் நாள்

படம் 2: நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக்கூட மாணவர்களும் ஆசிரியர்களும்.
படம் 2: நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக்கூட மாணவர்களும் ஆசிரியர்களும்.

கொம்தார் அரங்கில் இனிதே நடைபெற்றது. ஆறாவது ஆண்டாக நடத்தப்படும் இவ்விருதளிப்பு விழா பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் ஆதரவோடு பினாங்கு நகராண்மைக் கழகம் ஏற்பாடுச் செய்துள்ளது. இவ்விளக்கக் கூட்டத்தில் பினாங்கு தீவுப் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மற்றும் இவ்வாண்டு பாலர் பள்ளி மாணவர்களும் தத்தம் ஆசிரியர்களுடன் கலந்து சிறப்பித்தனர். 2015-ஆம் ஆண்டுக்கானப் பசுமை பள்ளி விருது போட்டியைத் தொடக்கி வைத்தார் பினாங்கு நகராண்மைக் கழக செயலாளரும் பொறியியலாளருமான அங் அய்ங் தாய்.

படம்1: பசுமை பள்ளி 2015-க்கான நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு நகராண்மைக் கழகச் செயலாளர்  பொறியியலாளருமான அங் அய்ங் தாய். (உடன் மற்ற ஆதரவாளர்கள்)
படம்1: பசுமை பள்ளி 2015-க்கான நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு நகராண்மைக் கழகச் செயலாளர் பொறியியலாளருமான அங் அய்ங் தாய். (உடன் மற்ற ஆதரவாளர்கள்)

பசுமை பள்ளி விருது பினாங்கு தீவில் உள்ள பள்ளி மாணவர்கள் அணிகளாக ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவே ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் வலுவான மரபுவழி அணுகுமுறை அடிப்படையில் கழிவு குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதை முதன்மை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது என தமது வரவேற்புரையில் கூறினார் பினாங்கு நகராண்மைக் கழக செயலாளரும் பொறியியலாளருமான அங் அய்ங் தாய்.

கடந்தாண்டு இப்போட்டிக்கு சுமார் 41 பள்ளிக்கூடங்கள் கலந்து கொண்டன. இவ்வாண்டு இன்னும் அதிகமான விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இப்போட்டி மறுசுழற்சி, படைப்பாற்றல் மற்றும் புதுமை, தூய்மை, பசுமை, சமூக ஈடுபாடு, உணவு கழிவு பயன்பாடு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பயன்பாடு, எரிசக்தி / மின்சாரம் சேமிப்பு, தண்ணீர் சேமிப்பு, நெகிழி பைகளின் பயன்பாடு என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் நிலை வெற்றியாளர்களுக்கு ரிம2,000 , பரிசு கோப்பை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து 9 வெற்றியாளர்கள் பரிசுகளைப் பெறுவர்.

இப்போட்டி இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை நடைபெறும். இப்போட்டிக்கான விண்ணப்பப்பாரத்தை www.mppp.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் பதிவிரக்கம் செய்துக்கொள்ளலாம். பசுமை பள்ளி போட்டிக்கான இதர ஆதரவாளர்கள் F&N குளிர்பான விநியோகஸ்தர், தெர்தெரா பெக் சென்.பெர்ஹாட், பினாங்கு ஶ்ரீ தஞ்சோங், பினாங்கு சுற்றுச்சூழல் துறை மற்றும் பினாங்கு கல்வித் துறை இணைந்து ஏற்பாடுச் செய்துள்ளனர்.

}