பினாங்கு மாநில நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு

பிறை தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் சிறுவர்களுக்கு அன்பளிப்பு எடுத்து வழங்கினார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
பிறை தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் சிறுவர்களுக்கு அன்பளிப்பு எடுத்து வழங்கினார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

மலேசிய நாட்டின் முதன்மை பெருநாட்களில் ஒன்றான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் அண்மையில் அனைத்து மலேசிய முஸ்லீம் அன்பர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிறை வாழ் மூஸ்லீம்களை அங்கீகரிக்கும் வகையில் அத்தொகுதியின் ஏற்பாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் திகதி பட்டர்வோர்த் ஜயண்ட் பேரங்காடி வளாகத்தில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது. மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஸ்பாய்ஸ் அரங்கத்தில் மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அப்பாஸ் சிறப்பு வருகையுடன் கொண்டாடப்பட்டது.

 டத்தோ கெராமாட் தொகுதியின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் சிறுவர்களுக்கு 'ராயா' அன்பளிப்பு வழங்கினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ.
டத்தோ கெராமாட் தொகுதியின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் சிறுவர்களுக்கு ‘ராயா’ அன்பளிப்பு வழங்கினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ.

தொடர்ந்தார்போல், பினாங்கு மாநில அரசு அலுவலகங்கள், சட்டமன்ற தொகுதிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் மிக விமரிசையாக நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றன. அனைத்து நிகழ்வுகளிலும் இஸ்லாம் மதத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சார்ந்தே கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். பினாங்கு மாநில மூவின மக்களும் அனைத்து நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டது பினாங்கு மாநில மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றது.}