பொது வீடமைப்புத் திட்டங்களும் பராமரிக்கப்படும் – திரு.ஜெக்டிப்

தாமான் பிரி ஸ்கூல் புதிய மின்தூக்கியை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ.
தாமான் பிரி ஸ்கூல் புதிய மின்தூக்கியை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ.

மாநில அரசு பழமையான பொது வீடமைப்புத் திட்ட பராமரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தவறியதில்லை என தாமான் பிரி ஸ்கூல் அடுக்குமாடி குடியிருப்பின் புதிய மின்தூக்கி பொருத்தப்பட்ட நிகழ்வில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ . தாமான் பிரி ஸ்கூல் அடுக்குமாடி குடியிருப்பு சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஆரம்பகாலத்தில் பத்து மாடிக்கு குறிப்பிட்ட மூன்று மாடிகளில் மட்டும் மின்தூக்கி நிற்கும். ஆனால், மாநில அரசின் முயற்சியில் இம்மின்தூக்கி மேம்படுத்தப்பட்டு தற்போது அனைத்து மாடிகளிலும் பொது மக்கள் இச்சேவையைப் பயன்படுத்த முடியும் என்றார் ஆட்சிக்குழு உறுப்பினர்.
இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்காக திறந்த குத்தகை முறையில் மாநில அரசு தெத்துவான் எ.கே.கே எலியான்ஸ் தனியார் நிறுவனத்தை நியமித்து பினாங்கு மாநகர் மன்றத்தின் கீழ் சுமார் ரிம498,701.40 செலவில் இம்மின்தூக்கி மற்றும் இதர மேம்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்தியுள்ளது பாராட்டக்குறியதாகும். மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் பழமையான தாமான் பிரி ஸ்கூல் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த 2016-ஆம் ஆண்டு மாநில வீடமைப்பு வரவுச் செலவு திட்டத்தின் கீழ் இரகசிய கேமரா பொருத்துதல் மற்றும் சாயம் பூசுதல் ஆகியவை மேற்கொள்ளபடவுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

தாமான் பிரி ஸ்கூல் அடுக்குமாடி
தாமான் பிரி ஸ்கூல் அடுக்குமாடி

பினாங்கு மாநில அரசு பினாங்கு வாழ் மக்கள் சொந்த வீடு பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையில் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதனிடையே, “Strata title” எனும் உரிமைத்துவத்தை பினாங்கு மாநில அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் பெற்றிருப்பதை மாநில அரசு உறுதிச்செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர்