பொது வீடமைப்புத் திட்டங்கள் பராமரிக்கப்படும் – பேராசிரியர்

Admin
புதிய மின் தூக்கியை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
புதிய மின் தூக்கியை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

மாநில அரசு பழைமையான பொது வீடமைப்புத் திட்டங்களின் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க தவறியதில்லை என பிறை தெலோக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பின் புதிய மின்தூக்கி பொருத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. பிறை தெலோக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். பொறுப்பற்ற ஒரு சில தரப்பினரால் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பழுதாக்கப்படுவதை வன்மையாக சாடினார் துணை முதல்வர். ஆனால், மாநில அரசின் முயற்சியில் இம்மின்தூக்கி மேம்படுத்தப்பட்டு தற்போது அக்குடியிருப்பு மக்களின் வசதிக்காக பொருத்தப்பட்டுள்ளது.
‘இ1’ மற்றும் ‘இ2’ பிரிவுகளில் புதிதாக இரண்டு மின்தூக்கி பொருத்த மாநில அரசு ரிம170,000 செலவிடப்பட்டுள்ளது. இம்மொத்த செலவில் 20% பிறை தொகுதி நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். பிறை தெலோக் இண்டா அடுக்குமாடியின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த கூடிய விரைவில் மாநில வீடமைப்பு வரவுச் செலவு திட்டத்தின் கீழ் இரகசிய கேமரா பொருத்துதல் மற்றும் வேலி அமைத்தல் போன்றவைகள் மேற்கொள்ளபடவுள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, அந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் சுற்றுவட்டாரத்தை தூய்மையுடனும் சுகாதாரத்துடனும் வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதன்வழி, சுற்றுச்சுழல் காக்

பிறை தெலோக் இண்டா அடுக்குமாடி
பிறை தெலோக் இண்டா அடுக்குமாடி

கப்படுவதோடு டிங்கி கொசு பரவுவதையும் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.