பொது சேவை துறையில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் – பேராசிரியர்

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட செபராங் பிறை நகராண்மைக் கழக ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

இந்நாட்டு பொது சேவை துறையில் குறிப்பாக மாநில உள்ளூராட்சி மன்றங்களில் அதிகமான இந்தியர்கள் இடம்பெற வேண்டும் எனவும் இந்தியர்கள் சமூக மேம்பாட்டில் முன்னேற வேண்டும் எனவும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி தெரிவித்தார். மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித வளம், அறிவியல், தொழில்நுட்பம் & கண்டுபிடிப்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி பொங்கல் விழாவை டத்தோ ஹஜி அகமது படாவி அரங்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தொடர்ந்து மற்ற ஊராட்சி மன்றங்களிலும் இந்நிலை ஏற்பட வேண்டும்எனக் குறிப்பிட்டார்.

செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் அதிகமான இந்தியர்கள் இடம்பெறுவதை உறுதிச்செய்வதற்கு ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என பொங்கல் விழாவில் வரவேற்புரையாற்றும் போது தெரிவித்தார். பொங்கல் விழாவில் பொங்கல் வைத்தல், கோலம் வரைதல் மற்றும் பரிசுக்குலுக்கல் உட்பட பல நிகழ்வுகள் நடைபெற்றன.

கோலம் போட்டி நடைப்பெற்றது

பொங்கல் விழாவில் நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு சத்திஸ் முனியாண்டி மற்றும் திரு டேவிட் மார்ஷல் கலந்து கொண்டனர்.