பொது மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை

பிளவுகள் ஏற்பட்டுள்ள கட்டிடப்பகுதியைப் பார்வையிட்டனர் சட்டமன்ற உறுப்பினர் சே கா பெங் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹரி (நடுவில்)

1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரிப்பல் ரேஞ் (Rifle Range ) பொது வீடமைப்புக் கட்டிடத்தில் பிளவுகள் ஏற்பட்ட நிலையில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனக் கூறினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ .
இந்த வீடமைப்புப் பகுதியின் பிளாக் E மற்றும் J-வில் பிப்ரவரி மாதம் தொடங்கி மறுசீரமைப்புப்பணிகள் தொடங்கப்படும். மாநில அரசு இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம954,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. மேலும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாநில அரசு மேம்பாட்டு நிறுவனம் நியத்துள்ளதாகவும் கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் திரு ஜெக்டிப். பொது மக்களின் பாதுகாப்பு குறித்து மறுசீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.
பொது வீடமைப்புக் கட்டிடத்தைப் பார்வையிட கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் சே கா பெங் மற்றும் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹரி வருகை புரிந்தனர்.