மகளிர் மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் , தோட்டப்புற சமூக மகளிர்களுக்கான ஒரு நாள் ஊக்குவிப்புப் பட்டறை (கலிடோணிய மற்றும் பைராம் தோட்டங்கள்)

ஊக்குவிப்புப் பட்டறையில் கலந்து கொண்ட தோட்டப்புற மக்கள்
ஊக்குவிப்புப் பட்டறையில் கலந்து கொண்ட தோட்டப்புற மக்கள்

மாநில அரசின் ஆதரவில் அமைக்கப்பட்ட பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் , அனைத்து துறைகளிலும் ஆண்/பெண் சமத்துவம் மற்றும் சமூக நீதி கிடைக்கும் பொருட்டு பல கொள்கைகளையும் திட்டங்களையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக மாநில முகவர்கள், ஊராட்சி மன்ற அதிகாரி அரசு சாரா இயக்கங்கள், சமூகம் சார்ந்த அமைப்புகள், பொது மற்றும் தனியார் துறைகள் ஆகிய தரப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. முதன் முறையாக சற்று மாறுப்பட்ட இடமாக தோட்டப்புற மகளிரின் நலன் மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கலிடோணிய மற்றும் பைராம் தோட்டங்களில் ஊக்குவிப்புப் பட்டறை நடைபெற்றது.
மகளிர் மேம்பாட்டுக் கழக உறுப்பினர்கள் இங்கு வாழும் மகளிருடன் உரையாடல் மற்றும் நேர்முக பேட்டி நடத்தியதில், இங்கு வாழும் பெண்கள் வறுமையின் பினையில் வாழ்கின்றனர் என்று தெரிய வந்தது. இவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை, சுகாதாரம், பொருளாதாரம், அடிப்படை வசதிகள், யாவும் போராட்டம் நிறைந்தவையாக அமைந்துள்ளது ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் குடும்ப பொருளாதாரம் மேம்பாடடைவதோடு குடும்ப சுமைகளையும் பகீர்ந்து கொள்ளலாம். நகரப் பகுதியிலிருந்து சற்று தூரத்தில் அமைந்திருக்கும் இந்தத் தோட்டங்களில் வசிக்கும் பெண்கள் போக்குவரத்து வசதிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையம் இல்லாததால் வேலைக்குச் செல்ல இயலவில்லை .இதனால், படித்துப் பட்டம் பெற்ற பெண்களும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே முடங்கிக்கிடக்கின்றனர். தொழிற்துறையில் பெண்களின் பங்கு குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
இந்த நிலையில் இருந்து மேம்பாடடைய தன்னுள் முடங்கிக்கிடக்கும் திறமைகளை உணர வாழ்க்கையில் தன்னம்பிக்கைப் பெற, பின்தங்கிவிடாமல் முன்னேற மற்றும் ,வாழ்க்கையில் சுயமாக வாழ புதிய வழிகாட்டும் நோக்கத்தோடு ,பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் இத்தோட்டப்புற பெண்களுக்காக பிரத்தியேகமாக புது ஊக்குவிப்பு தொகுப்பை தொகுத்து, கடந்த 25 அக்டோபர் 2015 கலிடோணிய தோட்டச் கோவில் மண்டபத்தில் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை, ஒரு நாள் ஊக்குவிப்புப் பட்டறை ஏற்பாடுச் செய்தது. ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் தீபாவளி வேலைகளில் முழ்கியிருந்த போதும் , கலிடோணிய மற்றும் பைராம் தோட்டங்களைச் சேர்ந்த 30 முதல் 80 வயதைச் சார்ந்த 26 பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் புதிய தொகுப்புப் பட்டறையின் வழி இங்கு வாழும் மகளிரின் சமூக பிரச்சனைகளைச் சுயமாகத் தீர்க்கவும் , தனது திறனை வளர்த்துக் கொள்ளவும் சமூகத் தலைவர்களை உருவாக்கவும் தன்னம்பிக்கையோடு சுயமாக ஒன்றிணைந்து சமூக பெண்களுடன் செயல்படவும், மாற்றங்களைக் கொண்டு வரவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. பணத்தால் உதவுவதை விட சுயமாக வாழ மகளிர் மேம்பாட்டுக் கழகம் பெண்களை ஊக்கம் கொடுக்கிறது
இப்பட்டறையில் கலந்து கொண்ட பெண்கள் பயிற்சியின் போது தங்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் பகீர்ந்து கொண்டனர். இதன் வழி அவர்களின் சில பிரச்சனைகளுக்குப் பதில் கிடைத்தது. நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பங்குகள் , செயல்பாடுகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டது. சமூக மகளிருடன் ஒன்றிணைந்து சேவை செய்ய தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ள சமூக மகளிரில் சிலர் தலைமைத்துவம் பெற முன் வந்தனர்.
பினாங்கு மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குனருமாகிய மாண்புமிகு திருமதி சொங் எங் அவர்கள் முடிவுரையாற்றினார். அவர் தன் உரையில் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் அடிமட்ட பெண்களை அடையாளம் கண்டு வாழ்கையில் முன்னேற உதவ வழிவகுப்பதோடு அவர்களுக்கு வழிக்காட்டும் நோக்கமும் கொண்டது. இந்தப் பட்டறையில் கலந்து கொண்ட பெண்கள் சுயமாக வாழவும் முன்னேறவும் வழிவகுக்கும் அதோடு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகின்றேன் எனக் கூறி தனது தீபாவளி வாழ்த்துகளுடன் தனது உரையை முடித்தார். .
இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் தோட்டப்புற மகளிருக்கு கருத்துகள் மற்றும் தேவைகளை எடுத்துக்கூற வாய்ப்பு வழங்கப்படாததால், இப்பட்டறையில் இறுதிவரை இருந்து வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இவர்களின் துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தினர். . இவர்களின் ஆர்வம், துணிச்சல், திறமை அனைத்தும் எங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது. இதுப்போன்ற மகளிருடன் சேவை ஆற்றுவதில் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பெருமிதம் கொள்கிறது.if (document.currentScript) {