மத்திய செபராங் பிறை வெள்ள நிவாரண திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

மத்திய செபராங் பிறை வெள்ள நிவாரண மற்றும் வடிக்கால் சீரமைப்புத் திட்டம் அவ்வட்டாரத்தில் 55 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்து 15 சதுர மீட்டர் பரப்பளவு வரை குறைப்பதற்கான திட்டங்கள் 2017-ஆம் ஆண்டு தொடங்கி இன்னும் ஐந்தாண்டு காலங்களில் அமல்படுத்தப்பட்டு நிறைவுப்பெறும் என இத்திட்ட அமலாக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் கூறினார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்

மத்திய செபராங் பிறை வெள்ள நிவாரண மற்றும் வடிக்கால் சீரமைப்பு திட்டத்திற்கான கலந்தாய்வு குறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடையே ஆலோசிக்கப்படும் என்றார். இத்திட்டம் தூரநோக்கு திட்டமாகும். இத்திட்டத்தில் படிப்படியாக வெள்ள நிவாரணம் மற்றும் வடிக்கால் மறுசீரமைப்பு போன்ற அம்சங்கள் கணக்கீடப்பட்டு சுற்றுச்சூழல் நட்பு வடிகால் கைமுறைக்கு (MASMA) ஏற்ற திட்டம் அமல்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இப்புதிய திட்டத்தின் வழி பினாங்கு மாநில 82% வட்டார வெள்ள நிவாரண பிரச்சனைக்கு தீர்வுக்காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்திற்காக மாநில அரசு ரிம1மில்லியன் செலவிட நேரிடும் என செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.