மாநில அரசு அந்நிய வியாபாரிகளின் வர்த்தக சந்தைக்குத் தடை விதித்தது

மலேசிய இந்திய வர்த்தக பினாங்கு மாநில சங்கத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகப் பிரபலமான வர்த்தக நிறுவனங்கள் அந்நிய வியாபாரிகளைப் பயன்படுத்தி பினாங்கில் வர்த்தக சந்தை நடத்துவதால் லிட்டல் இந்தியா வர்த்தகர்களின் வியாபாரம் அதிகமளவில் பாதிக்கப்படுவதாக மலேசிய இந்திய வர்த்தக பினாங்கு மாநில சங்கத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வருங்காலங்களில் பினாங்கில் அந்நிய வியாபாரிகள் பயன்படுத்தி வர்த்தக விற்பனை அல்லது தீபாவளி சந்தை நடத்துவதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் அனுமதி பெற வேண்டும். அதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு பினாங்கு இந்திய வர்த்தக சங்கத்தின் ஆலோசனைப் பெறப்படும் என மேலும் தெரிவித்தார்.

குறுகிய கால வரையறையில் நடத்தப்படும் வர்த்தக விற்பனையால் லிட்டல் இந்தியா வியாபாரிகள் அதிகமாக பாதிக்கப்படுகிறன்றனர். அச்சந்தையில் விற்கப்படும் பொருள்கள் லிட்டல் இந்தியா வியாபாரிகளைக் காட்டிலும் மிக மலிவாக விற்கப்படுவதைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உள்நாட்டு வியாபாரிகள் கடை வாடகை, பணியாளர்கள் சம்பளம்,, வருமான வரி, மதிப்பீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகிய கட்டணங்கள் செலுத்துவதால தான் வியாபார பொருளின் விலை அதிகரிக்கிறது” என டத்தோ கோபாலகிருஷ்ணன் பதிலளித்தார்.

வர்த்தக சங்கத்தின் நீண்ட நாட்களின் போராட்டத்திற்குப் பலனாக மாநில அரசு வருங்காலங்களில் அந்நிய வியாபாரிகளின் வர்த்தகச் சந்தைக்குத் தடை விதித்துள்ளது. இதனால் உள்நாட்டு வியாபாரிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.

மலேசியாவில் மொத்தமாக 14 இந்திய வர்த்தக சங்கங்கள் உள்ளன. அதில் 1923-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகுந்த பழமை வாய்ந்த மற்றும் முதன்மை இந்திய சங்கமாக பினாங்கு இந்திய வர்த்தக சங்கம் கால் தடம் பதிக்கின்றது. லிட்டல் இந்தியா வியாபாரிகள் மளிகை வியாபாரம், நகைக் கடை, ஆபரணக் கடை, துணிக்கடை, உணவகம். இரும்புக் கடை மற்றும் பல வகையான வணிகத்தில் ஈடுப்படுகின்றனர்.

லிட்டல் இந்திய உருமாற்றம் திட்டத்திற்கு ரிம1 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்குவதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உறுதியளித்தார். லிட்டல் இந்தியா பகுதியின் மாண்பினைப் பறைச்சாற்றும் வகையில் கூடிய விரைவில் பிரமாண்டமான நுழைவாயில் மாநகர் கழக துணையுடன் நிறுவப்படும்” என டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

பொருள் சேவை வரி (ஜி.எஸ்.தி) அமலாக்கத்தினால் வியாபாரத் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. ஜி.எஸ்.தியின் அமலாக்கத்தினால் வியாபாரத் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்களும் பொருட்களைக் கூடுதல் விலையில் வாங்க நேரிடுகிறது. இதனால், பொது மக்களின் செலவினங்களும் அதிகரிக்கிறது.