மாநில அரசு மலிவு விலை வீடமைப்புத் திட்டம் மேற்கொள்வதில் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோஎஸ்.பி செல்லையா சாலையின் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை பார்வையிட்டார்.

மாநில அரசு பினாங்கு வாழ் மக்களுக்காக குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் அமைப்பதற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது. எஸ்.பி செல்லையா சாலையில் மேற்கொண்டு வரும் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் தக்கச் சான்றாக அமைகிறது. இத்திட்டம் 65% முழுமைப்பெற்றுள்ளது.

இந்த மலிவு விலை வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டதைக் காட்டிலும் மிக விரைவாக முழுமைப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

இதன் மூலம் மாநில அரசு மலிவு விலை வீடமைப்புத் திட்டம் மேற்கொள்வதில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றுகிறது என்பது மெய்ப்பிக்கப்படுகிறது”.

பினாங்கில் மாநில அரசு 18 மலிவு விலை வீடமைப்புத் திட்டங்கள் திட்டமிட்டுள்ளன. அதில் 6 வீடமைப்புத் திட்டங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஜீரான் ரெசிடன்சி, கம்போங் ஜாவா, பட்டர்வோர்த், மலிவு விலை வீடமைப்புத் திட்டம் 90% நிறைவுப்பெற்றுள்ளது. அத்திட்டத்தில் 353 நடுத்தர மலிவு விலை வீடுகளும் 354 குறைந்த மலிவு விலை வீடுகளும் கட்டப்படுள்ளன. அதேவேளையில், டுவா ரெசிடன்சி, தெலுக் கும்பார் வீடமைப்புத் திட்டம் (346 நடுத்தர மலிவு விலை வீடுகள் மற்றும் 348 குறைந்த மலிவு விலை வீடுகள்) 60% முழுமைப்பெற்றுள்ளது,” என எஸ்.பி செல்லையா வீடமைப்புத் தளத்தை பார்வையிட்ட திரு ஜெக்டிப் கூறினார்.

இந்நிகழ்வில் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் எங் மற்றும் தங்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் அங் வேய் அய்க் கலந்து கொண்டனர்.

மேலும், கூட்டரசு அரசாங்கம் அறிவித்த ஒரே மலேசிய வீடமைப்புத் திட்டம் (பிரிமா) இதுவரை பினாங்கில் நிறுவப்படவில்லை என்றார்.

எஸ்.பி செல்லையா மலிவு விலை வீடமைப்புத் திட்டம் 65% நிறைவுப்பெற்றுள்ளது.

தேசிய முன்னணி அரசாங்கம் பினாங்கில் 1999—2007 வரை 5,154 குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் கட்டியுள்ளன. அதேவேளையில். நம்பிக்கை கூட்டணி அரசு 2008 – 2017 வரை 24,277 குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள் கட்டியிருப்பது தக்க சான்றாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 10 ஆண்டு கால வரையறையில் ஒப்பிடுகையில் பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசு தேசிய முன்னணி அரசைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதலாக வீடுகள் கட்டியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஜெக்டிப் கூறினார்.