முபாலிக் பள்ளிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்கியது

புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளி பிரதிநிதியிடம் மானியம் வழங்கினார்

பினாங்கு மாநில அரசு திறமையான நிர்வாகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருமானத்தை பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு ஒன்பதாவது முறையாக முபாலிக் பள்ளிகளுக்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொம்தார் அரங்கத்தில் மானியம் எடுத்து வழங்கினார். இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 22 முபாலிக் பள்ளிகளுக்கு மாநில அரசு ரிம1.18 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக தமதுரையில் குறிப்பிட்டார் .

இவ்வாண்டு பள்ளிகளில் கால்வாய் சீரமைப்பு, கழிவறை மேம்பாடு என முக்கிய அம்சங்களுக்காக பிரத்தியேகமாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய கட்டிடம், விளையாட்டு தளம், அறிவியல் கழகம், வகுப்பறைகள் அமைத்தல், வேலி போடுதல், மற்றும் இதர மறுசீரமைப்பு திட்டங்களுக்காக 22 முபாலிக் தேசியப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநில அரசின் பொறுப்பு, ஆற்றல் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தினால் இம்மானியங்கள் வழங்கும் சாத்தியம் ஏற்படுவதாக தமதுரையில் குறிப்பிட்டார் முதல்வர்.

நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்களான திரு ஜெக்டிப் சிங் டியோ, சோங் எங், சாவ் கொன் யாவ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் கலந்து சிறப்பித்தனர்