மூத்த குடிமக்கள் சேவைக்கு அங்கீகாரம்

Admin
தங்கத் திட்ட உதவித்தொகை பெற்றுக்கொண்ட மூத்த குடிமக்களுடன் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் திரு டேவிட் மார்ஷல்

பினாங்கு மாநிலத்தில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மாநில அரசு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட்டினை வழங்கி வருகிறது. இப்பணம், பினாங்கு மாநில வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உழைத்த மூத்த குடிகளின் சேவையினைப் போற்றும் வண்ணம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை மூத்த குடிமக்கள் தங்கத் திட்டத்தில் பதிவுப்பெற்றுள்ளவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மலயன் வங்கிகளில் ரிம100-ஐ ரொக்கப்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். பிறை சட்டமன்ற தொகுதியில் 3,266 வயோதிகள் தங்கத் திட்ட ரொக்கப்பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

பிறை சட்டமன்ற சேவை மைய உதவியுடன் நடைபெற்ற மூத்த குடிமக்களுக்கான பணம் வழங்கும் இடத்திற்கு இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி கலந்து கொண்டார்.

திருமதி நிர்மலா

தற்போது வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ளதால் மாநில அரசு வழங்கும் பணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என உதவித்தொகை பெற்றுக்கொண்ட திருமதி நிர்மலா, 62 தெரிவித்தார். வசதி குறைந்த பொது மக்களுக்கு மளிகை பொருட்கள் கொடுக்க வேண்டும் என மேலும் கூறினார்.

திருமதி வள்ளியம்மா, 76 தங்கத் திட்ட நிதியுதவி வழங்கிய மாநில அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். பேராசிரியர் ப.இராமசாமி இந்திய மக்களுக்கு பிரதிநிதியாக விளங்குவதோடு பிறை தொகுதி மக்களின் பிரச்சனைக்கு உடனடி குரல் கொடுப்பார் என கூறினார்.