யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 54 மாணவர்களுக்குச் சன்மானம்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்  யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவிக்குச் சன்மானம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கினார்.
மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவிக்குச் சன்மானம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கினார்.

இந்திய மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவதற்கு அடித்தலமாக யூ.பி.எஸ்.ஆர் தேர்வு அமைகிறது என்றால் மிகையாகாது. இந்நிகழ்வு தாமான் செம்பாடான் ஐக்கிய ஜனநாயக செயற்கட்சி(ஐசெக) கிளைத் தலைவர் பி.ஆர் காளியப்பன் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ‘ஏ’ பெற்ற 54 மாணவர்களுக்கும் சன்மானம் வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்நிகழ்விற்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ், மலாய் மற்றும் சீன ஆரம்பப்பள்ளியைச் சார்ந்த 54 மாணவர்களுக்கும் மாநில முதல்வர் ரிம100 ரொக்கப்பணமும், நற்சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார். சிறப்பு வருகையளித்த மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.
மேலும், அந்நாளில் ஐயப்பப் பூஜை நடைபெற்றதால் குருசாமி திரு சுப்பிரமணியம் குருநாதார் ஆசி வழங்கினார். இந்நிகழ்வில் ஏறக்குறைய 1000 பக்தர்கள் அலைகடல் போல் திரண்டனர். இந்த மாதிரியான சமூகநலம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் கம்போங் பாருவில் அமைந்திருக்கும் காளியம்மன் ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் தமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். திரு விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஐயப்பப் பூசையில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் ஏற்பாட்டுக்குழுவினர்.
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் ஏற்பாட்டுக்குழுவினர்.

மேலும், இந்நிகழ்வு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவதோடு எதிர்காலத்தில் கூடுதல் தேர்ச்சி பெற ஊந்துகோளாக அமையும் என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு காளியப்பன். இன்றைய காலக்கட்டத்தில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறுவது எளிதான காரியமல்ல என்றார். எனவே, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை கெளரவிப்பது சாலச்சிறந்ததாகும்.