வெற்றிக்கு உழைப்பு, நேர்மை மற்றும் தைரியம் அவசியம் -முதல்வர்

 

    ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்களுடன் மாநில முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள்

மாநில முதல்வரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான மேதகு லிம் குவான் எங் தொடர்ந்து 7-வது முறையாக பாகான் நாடாளுமன்ற வசதி குறைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இந்த ஆண்டு 22 ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியைச் சார்ந்த 660 மாணவர்களுக்கு மாநில முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரிம100 வழங்கப்பட்டு மொத்தமாக
ரிம66,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மாநில அரசு ரிம418,000 நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது. பாகான் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 30 வசதி குறைந்த மாணவர்களும் நிதியுதவி பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் பி புன் போ மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் கலந்து கொண்டனர்.
” வெற்றிக்கு குறுக்கு வழி ஏதும் கிடையாது. வெற்றிப்பெறுவதற்கு கடின உழைப்பு, நேர்மை மற்றும் தைரியமாக இருத்தல் வேண்டும். இந்த நற்குணங்களைக் கொண்டு வறுமை சுழற்சியிலிருந்து விலகி வெற்றிப்பெற்ற தனிநபராக ஒரு தொழில்முனை சார்ந்த மாநிலத்தில் உருவாகலாம் ” என மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.