தேசிய முன்னணியின் ஆட்சிக்கீழ் செயல்பட்ட பினாங்கு மாநில அரசு ஏறக்குறைய 3661 ஏக்கர் நிலத்தை ரிம 1.0586 பில்லியனுக்கு விற்றுள்ளது. ஆனால் மக்கள் கூட்டணி ஆட்சிக்கீழ் செயல்படும் மாநில அரசு 106.1 ஏக்கர் நிலத்தை ரிம1.1102 பில்லியனுக்கு விற்றுள்ளது.

மக்கள் கூட்டணி அரசைக் காட்டிலும் 36 மடங்கு கூடுதலாக தேசிய முன்னணி நிலத்தை விற்றப்போதிலும் குறைவான வருமானத்தைப் பெற்றுள்ளதை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மக்கள் கூட்டணி அரசு கூடுதலான இலாபத்தைப் பெறுவதற்குத் திறந்த குத்தகை முறையே சான்றாக அமைவதாகக் கூறினார். மக்கள் கூட்டணி அரசைக் காட்டிலும் குறைவான வருமானத்தை ஈட்டிய தேசிய முன்னணியின் செயலின் பிரதிபலிப்பாக கீழ்க்காணும் அட்டவணை 1 அமைகிறது. ஆற்றல், பொறுப்பு, வெளிப்பாடு கொள்கையின் கீழ்ச் செயல்படும் மக்கள் கூட்டணியின் வருமான விபரம் கீழ்க்காணும் அட்டவணை 2 காண்பிக்கின்றது

 

படம் 1: மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நில விற்பனை அறிக்கையைக் காண்பிக்கின்றார்
படம் 1: மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நில விற்பனை அறிக்கையைக் காண்பிக்கின்ற 

தேசிய முன்னணி நில விற்பனை

நிலம் இடம் ரிம (சதுர அடி ஒன்றுக்கு) மொத்த விற்பனை விலை (ரிம)
980 ஏக்கர் தஞ்சோங் தோகோங் (Tanjong Tokong) ரிம 1 42.7 மில்லியன்
325 ஏக்கர் ஜெலுந்தோங் எக்ஸ்பிரேஸ்வே

(Jelutong Expressway )

ரிம 20 325 மில்லியன்
750 ஏக்கர் பத்து காவான்(Batu Kawan) (அபாட் நலுரிக்கு விற்கப்பட்டது) ரிம 3.24 106 மில்லியன்
1606 ஏக்கர் பட்டர்வொர்த் (Butterworth) (ரய்சோன் கொன்சோர்த்தியம் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது) ரிம 8.40 584.9 மில்லியன்
3661 ஏக்கர் (மொத்தம்)     1.05886 மில்லியன் (மொத்தம்)

அட்டவணை 1

 

மக்கள் கூட்டணி நில விற்பனை

நிலம் இடம் ரிம (சதுர அடி ஒன்றுக்கு) மொத்த விற்பனை விலை (ரிம)
1.1 ஏக்கர் ஜாலான் சய்னால் அபிடின்/தாமான் மங்கிஸ் (di Jalan Zainal Abidin dekat Taman Manggis) ரிம 232 10.2 மில்லியன்
105 ஏக்கர் பாயான் முத்தியாரா (Bayan Mutiara) ரிம 240 1.1 மில்லியன்
106.1 ஏக்கர் (மொத்தம்)     1.1102 மில்லியன் (மொத்தம்)

அட்டவணை 2