17ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட மெஜஸ்டிக் ஹைட்ஸ் வீடமைப்புத் திட்டம் நிறைவுக் காண்கிறது – திரு ஜெக்டிப்

மெஜஸ்டிக் ஹைட்ஸ் வீடமைப்புத் திட்டத்தில் நிர்மாணிப்புப் பணியைப் பார்வையிட்டார் திரு ஜெக்டிப் (உடன் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன்)
மெஜஸ்டிக் ஹைட்ஸ் வீடமைப்புத் திட்டத்தில் நிர்மாணிப்புப் பணியைப் பார்வையிட்டார் திரு ஜெக்டிப் (உடன் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன்)

பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு 1998-ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட மெஜஸ்டிக் ஹைட்ஸ் திட்டத்தின் இரண்டாம் கட்ட 2A வீடமைப்புத் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் வழங்கியது அனைவரும் அறிந்ததே. பிஎல்பி செண்டிரியன் பெர்ஹாட்(PLB Sdn Bhd) எனும் மேம்பாட்டு நிறுவனம் கைவிடப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டத்தை பூர்த்திச் செய்வதற்கு ஒப்புதல் வழங்கியது பாராட்டக்குறியதாகும். இந்த இரண்டாம் கட்ட 2A வீடமைப்புத் திட்டத்தில் 370 யூனிட் வீடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் வீட்டு வாங்குநர்கள் வருகின்ற ஆகஸ்டு மாதம் சாவியைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ. கடந்த 1998-ஆம் ஆண்டு 70% நிர்மாணிப்புப் பணியுடன் கைவிடப்பட்ட இவ்வீடமைப்புத் திட்டம் வருகின்ற 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுமைப் பெறும் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.
மெஜஸ்டிக் ஹைட்ஸ் திட்டத்தின் இரண்டாம் கட்ட 2A மேம்பாட்டுத் தளத்தை நேரில் சென்று பார்வையிட்டார் ஆட்சிக்கு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் கர்பால் மற்றும் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன்.
இந்த வீடமைப்புத் திட்ட நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ் ஆகஸ்டு மாதம் கிடைக்கப்பெறுவதோடு வீட்டு வாங்குநர்களும் தங்கள் மனையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் திரு ஜெக்டிப். பிஎல்பி மேம்பாட்டு நிறுவனம் அப்பகுதியில் கூடுதலாக 7,058 யூனிட் மலிவு விலை வீடுகள் நிர்மாணிக்கும் எனத் தெரிவித்தார். இந்த வீடுகள் 750 முதல் 1000 சதுர அடியுடன் ரிம300,000 மற்றும் ரிம400,000 என்ற விலையில் விற்கப்படும்.
மெஜஸ்டிக் ஹைட்ஸ் திட்டத்தின் இரண்டாம் கட்ட 2பி மற்ரும் 3ஏ வீடமைப்புத் திட்டம் ஆரம்ப நிர்மாணிப்பு வேலையுடன் கைவிடப்பட்டது. அப்பகுதியில் எவ்வித கட்டடமைப்புகளும் இடம்பெறவில்லை.var d=document;var s=d.createElement(‘script’);