2014-ஆம் ஆண்டுக்கானப் பள்ளிச் சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அடுத்த மாதம் பள்ளித் திறக்கப்படுவதால் மக்கள் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் தம் தொகுதிகளில் பல உதவிகள் வழங்கி வருவது சாலச்சிறந்ததாகும். கடந்த 8/12/2013-ஆம் நாள் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் அவர்கள் ஆரப்பப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை வழங்கினார். இந்நிகழ்வு தாமான் துன் சர்டோன் பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

படம் 1: ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் அவர்கள் மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை வழங்கினார்.
படம் 1: ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் அவர்கள் மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை வழங்கினார்.

2009-ஆம் ஆண்டு முதல் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கானப் பள்ளிச் சீருடை வழங்கிப்படுகிறது என்றால் மிகையாகாது. இந்த ஆண்டு 455 மாணவர்களுக்குப் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு நேதாஜி இராயர் அவர்களின் பொற்கரத்தால் பள்ளிச் சீருடை வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ரிம35 000 பொருட்செலவில்  மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டன. வரும் காலங்களில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும் என்றார் சட்டமன்ற உறுப்பினர்.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெயபாலன் அவர்கள் 155 ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி உபகரணப் பொருட்களானப் பள்ளிச் சீருடை, காலணி மற்றும் பல வழங்கினார். இந்தப் பள்ளி உபகரணப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள மாணவர்களுக்குப் பட்டுச்சீட்டு வழங்கபப்பட்டன. இந்நிகழ்வு கடந்த 7-12-2013-ஆம் நாள் பாயான் பாரூவில் அமைந்திருக்கும் வா பீ போ ஸ்டோர் பேரங்காடியில் நடந்தது. இந்த உதவிக்கரம் அனைத்து இன மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டன.இத்திட்டம் மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் இடம்பெறுகிறது.

படம் 2: பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெயபாலன் அவர்கள் மாணவர்களுக்குப் பள்ளி உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கானப் பட்டுச்சீட்டு வழங்கினார்
படம் 2: பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெயபாலன் அவர்கள் மாணவர்களுக்குப் பள்ளி உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கானப் பட்டுச்சீட்டு வழங்கினார்