பிறை சட்டமன்ற தொகுதியும் செபெராங் பிறை நகராண்மைக் கழகமும் இணைந்து எரோப் உரமாக்கல் திட்டத்தை (Projek Komposter Aerob MPSP) கடந்த 19/10/2014-ஆம் நாள் தாமான் இண்ராவாசே குடியிருப்புப் பகுதியில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். இந்நிகழ்வில் செபெராங் பிறை நகராண்மைக் கழக மாநகர் இயக்குநர் Ir.ரொஸ்னானி மாமுட், செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான...