2017-ஆம் ஆண்டில் செபராங் பிறை நகராண்மைக் கழகம் 9 பிரதான திட்டங்களுக்கு முன்னுரிமை

செபராங் பிறை நகராண்மை கழகத் தலைவர் மைமுனா முகமது சாரிப்

2017-ஆம் ஆண்டு செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த 9 பிரதான திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தவிருப்பதாக பதவிப்பிரமானம் எடுக்கும் நிகழ்வில் உரையாற்றி செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப் கூறினார்
செபராங் பிறை வட்டார தூய்மை, பாதுகாப்பு மேம்பாடு, போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், வெள்ள நிவாரணத் திட்டம், பொது இடங்களை மேம்படுத்துதல், பசுமைத் திட்டம், பொது வசதி, கொள்ளளவை விரிவாக்கம் செய்தல், உடல் ஆரோக்கியம், திறம்பட சேவையாற்றல், சமுதாயத்தில் கடமை பங்களிப்பு போன்ற ஒன்பது திட்டங்களில் செபராங் பிறை நகராண்மை தீவிர கவனம் செலுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாண்டு சவால்மிக்க ஆண்டாகவும் அதனை எதிர்க்கொள்ள கடுமையான உழைப்பும் திறன்மிக்க நிர்வாகத்தின் மூலம் வெற்றி காணமுடியும் என மேலும் விவரித்தார்.
இவ்வாண்டு புதிய பரிமானமாக செபராங் பிறை நகராண்மைக் கழகம் பொது மக்களுக்கு இலகுவாக பங்களிப்பினை மேலோங்க செய்யவும் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு (Mobile Apps MPSP) பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்வழி, பொதுமக்கள் தேவையான வசதிகளை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள இந்த அணுகுமுறை அமல்படுத்தப்படும்.