7 இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவிப் பிரமானம்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் மைமுனா முகமது சாரிப், ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக பதவியேற்ற சத்தீஸ் முனியாண்டி, டேவிட் மார்ஷல் மற்றும் குமார் கணபதி.

2017-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவிப்பிரமானம் நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நகராண்மைக் கழக உறுப்பினர்கள் 1 ஜனவரி 2017 முதல் 31 டிசம்பர் 2017 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு நகராண்மைக் கழகத்திலும் முறையே 47 பேர் உறுப்பினர்களாகப் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர்.
செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் கடந்த 6/1/2015-ஆம் நாள் அக்கழக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 23 உறுப்பினர்களில் மூவர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் முறையே திரு மு.சத்திஸ், திரு டேவிட் மார்ஷல் மற்றும் திரு குமார். இந்தப் பதவிப்பிரமான நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு கையொப்பமிட்டனர்.
தமிழ்ப்பள்ளிகளில் பசுமையின் முக்கியத்துவத்தையும் அதன் அமலாக்கத்தையும் அதிகப்படுத்துவதை இவ்வாண்டுக்கான தலையாய நோக்கமாக கொண்டுள்ளதாக ஐந்தாவது முறையாக செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள சத்தீஸ் முனியாண்டி தெரிவித்தார். அதோடு, சுற்றுச்சுழல் (eco tourism) வளத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் பல அரிய முயற்சிகள் கையாளவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
நான்காவது முறையாக நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள டேவிட் மார்ஷல் செபராங் பிறையில் குத்தகை முறையில் இந்தியர்களின் ஈடுப்பாட்டை அதிகரிக்க எண்ணம் கொண்டுள்ளார். அதோடு, செபராங் பிறை வட்டாரத்தில் பசுமை திட்டங்களை அமல்படுத்தவும் அங்கு இந்தியர் வர்த்தகர் மையத்தை அமைக்கவும் இலக்கு கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே, சுங்கை பாக்காப்பில் அமைந்திருக்கும் பாரம்பரிய தளங்களை புதுப்பித்து பிரபலமடைய செய்ய நோக்கம் கொண்டுள்ளார்.
பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் நிகழ்வு கடந்த 5/1/2017-ஆம் நாள் பாடாங் கோத்தா மாநகர் கழக அரங்கில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 24 உறுப்பினர்களில் நால்வர் இந்தியர்கள் என்பது சாலச்சிறந்தது. அவர்கள் முறையே திரு ஆ.குமரேசன், திரு ஹர்விந்தர், திருமதி கலா மற்றும் திரு ஜோ.பிரான்சிஸ். இந்தப் பதவிப்பிரமான நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், பினாங்கு மாநகர் கழக தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு நியமனக் கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
நான்காவது முறையாக பினாங்கு மாநகர் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள திரு.குமரேசன் இவ்வாண்டு பினாங்கு மாநில அரசுடன் இணைந்து அனைத்துலக நகரமாக உருமாற்ற பல முயற்சிகள் எடுக்க இலக்கு கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். அதோடு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பினாங்கு வாழ் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஆதரிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்க உள்ளதாகவும் மற்றும் பினாங்கு ரபிட் பேருந்துகளுக்கு தனியாக சாலையை அமைக்க குரல் எழுப்பவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களாக பதவியேற்ற குமரேசன் ஆறுமுகம், ஹர்வின்டர் சிங், திரு ஜோ.பிரான்சிஸ், திருமதி கலா துரைராஜ்

இரண்டாவது முறையாக பினாங்கு மாநகர் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள திருமதி.கலா துரைராஜ் இவ்வாண்டு பெண்களுக்கென பிரத்தியேகமாக தமது பணியை செவ்வென ஆற்ற இலக்கு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பினாங்கு மாநகர் கழகத்தின் கீழ் செயல்படும் உணவகங்களில் தனித்துவாழும் தாய்மார்கள் சிறுதொழில் செய்ய ஆதரிக்கும் முயற்சியில் அவர்களுக்குச் சிறு கடைகள் பெற்று கொடுக்க முயற்சிக்கவிருப்பதாக கூறினார். மேலும், பொறுப்பற்ற ஆண்களால் ஏமாற்றப்பட்ட அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தவறான பாதையில் செல்வதை தவிர்க்க அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வாழ்க்கையில் மேன்மையடைய செய்ய வழிகள் அமைத்து கொடுக்க ஆர்வம் கொண்டுள்ளதாக விரிவுப்படுத்தினார்.
செபராங் பிறை நகராண்மைக் கழகம் மற்றும் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்களாகப் பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்ட இந்திய பிரதிநிதிகளை படத்தில் காணலாம்} else {