தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட 200 பேருக்கு பரிசுக்கூடைகள் – முதலமைச்சர்

Admin
img 20261031 wa0125

புக்கிட் தம்புன் – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயாவ், தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பேருக்கு தீபாவளி பரிசுக்கூடைஹை நேரில் வழங்கி மகிழ்வித்தார்.
img 20261031 wa0147

புக்கிட் தம்புன் சட்டமன்றத் தொகுதி சேவை மையம் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான மடானி தீபாவளி மற்றும் பயனீட்டாளர் நல்வாழ்வு விருந்தோம்பல் நிகழ்ச்சியில் இப்பரிசக்கூடைகள் வழங்கப்பட்டன.

img 20261031 wa0123
இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தொடர்புத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் இயாவ், தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் இப்பரிசுக்கூடைகள், வசதிக் குறைந்த குடும்பங்களின் சுமையைக் குறைப்பதுடன், அவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைக்குத் தயாராகவும் உதவும், என்றார்.

img 20261031 wa0135

மேலும், தீபாவளிப் பண்டிகை ஒட்டுமொத்த சமூகத்தினருக்கும் ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தையும் நம்பிக்கையையும் எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
img 20261031 wa0115

“இருளை ஒளி வெல்வது, தீமையை நன்மை வெல்வது, நம்பிக்கையின்மையை நம்பிக்கை வெல்வது என்பதே தீபாவளி உணர்த்தும் உன்னதமான செய்தியாகும்.

“இந்த பரிசுக்கூடைகள் பெறுநர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், தீபாவளிப் பண்டிகைக்கான தயாரிப்புகளிலும் சிறிதளவு உதவியாக அமையும் என நம்புகிறேன்,” என்றார்.
img 20261031 wa0139
இந்நிகழ்ச்சியில், 200 பேருக்கு பரிசுக்கூடைகளை நிதியுதவியாக வழங்கிய PENPEC குழுமத்தின் நிறுவனர் டத்தோஸ்ரீ சாவ் சாங் ஹெங்கிற்கும் அவர் தனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் பேசிய கொன் இயாவ், பினாங்கு2030 தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“எனது பார்வையில், உண்மையான முன்னேற்றம் என்பது முதலீடுகளின் எண்ணிக்கை அல்லது உள்கட்டமைப்பு மேம்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, அதன் பயன்களை மக்கள் எந்த அளவிற்கு அனுபவிக்கின்றனர் என்பதிலேயே அது அளவிடப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினரும் வர்த்தகம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான கோ சூன் ஐக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

“மேலும், அக்ரோ விற்பனைத் திட்டம் பொதுமக்கள் அன்றாடத் தேவைக்கான பொருட்களை நியாயமான, மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை மக்கள் முழுமையாக அனுபவிப்பதுடன், அதிகரிக்கும் செலவுகளால் அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

“அக்ரோ மடானி போன்ற திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படுவதன் மூலம் மேலும் அதிகமான மக்கள் அதன் பலன்களைப் பெற முடியும் என நம்புகிறேன்,” என கோ சூன் ஐக் தெரிவித்தார்.

மேலும், பினாங்கு 88 கேப்டன் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஓய் எங் ஹோக், சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ பினாங்கு மாநில இயக்குநர் ரஃபிதா அப்துல் ரஹீம் உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்தனர்.