மாநில அரசு அனைத்துலக பள்ளி கட்டுமானத் திட்டத்திற்கு முன்னோடி

அனைத்துலக வெஸ்லி மெத்தடிஸ்ட் பள்ளி மாதிரி வரைப்படம்
அனைத்துலக வெஸ்லி மெத்தடிஸ்ட் பள்ளி மாதிரி வரைப்படம்

20 வருடங்களாக குறைந்த விலை வீடு பெறும் 6 குடும்பங்களின் கனவு மாநில அரசின் உதவியால் நிறைவேறியதோடு
அனைத்துலக வெஸ்லி மெத்தடிஸ்ட் பள்ளி கட்டுமானப் பணி தொடங்குவதற்கு அடித்தளமாக் அமைந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ, முன்னாள் அரசு இக்குடும்பங்களின் பிரச்சனையைத் தீர்க்கத் தவறியதால் 2014-ஆம் ஆண்டு மெத்தடிஸ்ட் கல்வி பேரவை தமது கவனத்திற்குக் கொண்டு வந்தனர் என்றார்.
2014-ஆம் ஆண்டு தொடங்கி சம்பந்தப்பட்ட குடும்பங்களுடன் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப், சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சுயூ கிம், மெத்தடிஸ்ட் கல்வி பேரவை பொறுப்பாளர்கள், நூஸ் மெட்ரோ மேம்பாட்டு நிறுவனம் ஆகியோர் நடத்திய சந்திப்புக் கூட்டத்தின் பயனாக 6 குடும்பங்களும் அவ்விடத்தை விட்டு வெளியேற ஒப்புதல் வழங்கினர். மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் டேசா பினாங்கு 2 வீடமைப்புத் திட்டத்தில் ரிம42,000 மதிக்கத்தக்க வீடுகள் பெறுவதோடு நூஸ் மெட்ரோ மேம்பாட்டு நிறுவன சார்பாக ரிம25,000 சன்மானம் பெறுவர் என அறிவித்தார் திரு ஜெக்டிப்.

மாநில அரசு பினாங்கு வாழ் பொது மக்களுக்கு என்றும் முன்னுரிமை வழங்குவதோடு மேம்பாட்டுத் திட்டத்திற்கும் ஆதரவு நல்கும் என்பதற்கு இந்நிகழ்வு உதாரணமாக அமைகிறது. இறுதியில், வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஜெலுந்தோங் 4 ஏக்கர் நிலத்தில் அனைத்துலக வெஸ்லி மெத்தடிஸ்ட் பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார். 2018-ஆம் ஆண்டு நிறைவடையும் இக்கட்டுமானப் பணியால் 1000 மேற்பட்ட ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பயனடைவர் . இக்கட்டுமானத் திட்டத்தில் 40 வகுப்பறைகள், நூல் நிலையம், அறிவியல் கூடம் மற்றும் புறப்பட்ட நடவடிக்கை தளம் ஆகியவை இடம்பெறும்.