உள்ளூர் அரசாங்க அளவிலான சுத்தமான பொதுச் சந்தை பிரச்சாரம் தொடக்கம் காண்கிறது

Admin
sg bakap 1

 

சுங்கை பாக்காப் – 2025-ஆம் ஆண்டின் உள்ளூர் அரசாங்க (PBT) அளவிலான சுத்தமான பொதுச் சந்தை பிரச்சாரம் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும் ஒரு தேசிய முன்முயற்சி திட்டமாகும்.

இதில் குறைந்தபட்சம் கிரேடு ‘பி’ மற்றும் அதற்கு மேல் அடைவதற்கு பொதுச் சந்தைகளின் சுற்றுப்புற தூய்மை மற்றும் மேலாண்மையின் தரத்தை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழல் தூய்மைக்கான பகிரப்பட்ட பொறுப்புணர்வை வலுப்படுத்தவும் PBT, உள்ளூர் தலைவர்கள் மற்றும் சமூகத்திற்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும் இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செபராங் பிறையில், கிரேடு ‘ச்’ என வகைப்படுத்தப்பட்ட இரண்டு (2) சந்தைகள் உள்ளன. அவற்றில் ஒன்று சுங்கை பாக்காப் பொதுச் சந்தை ஆகும். எனவே, சுங்கை பாக்காப் பொதுச் சந்தையில் பிரச்சாரத்தை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், சந்தையின் ஒட்டுமொத்த தூய்மை மதிப்பீடு மற்றும் தரத்தை மேம்படுத்த இவ்விடம் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசாங்க (PBT) அளவிலான சுத்தமான பொதுச் சந்தை பிரச்சாரம் 2025 தொடக்கி வைத்த பின்னர் தமதுரையில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் எங் மோய் லாய் தெரிவித்தார்.

 

“1993-ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் சுங்கை பாக்காப் பொதுச் சந்தையில், தற்போது 95 கடைகள் உள்ளன. அவற்றில் 39 வாடகை கடைகள் ஆகும். இந்தப் பிரச்சாரத்தின் மூலம், அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்புடன், நாம் தூய்மையின் அளவை மட்டுமல்லாமல், இந்த சந்தையின் தரத்தையும் அழகையும் மேம்படுத்த முடியும்.
“இந்தச் சந்தையின் தூய்மை மேம்படுத்தப்பட்டால், சுத்தமான மற்றும் வசதியான சூழ்நிலை உருவாகும். இங்கு அதிகமான பொது மக்களை ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

“மேலும், பொது மக்களின் வருகை அதிகரிக்கும் போது, இது இங்கு வணிக நடவடிக்கைகளை நேரடியாக மேம்படுத்தும். மேலும் எதிர்காலத்தில் இங்குள்ள வணிக இடத்தை அதிகமான வர்த்தகர்கள் நிரப்புவர்,” என ஜேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

தூய்மை என்பது அனைவரின் பொறுப்பு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இன்றைய வர்த்தகர்கள் மற்றும் பயனீட்டாளருக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் சுத்தமான, வசதியான மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும் பொதுச் சந்தைகளை வழங்க மாநில அரசு விரும்புகிறோம். இது போன்ற பிரச்சாரங்கள் நகர்ப்புற நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலையும், மாநில அரசாங்கத்தால் இயக்கப்படும் நிலையான வளர்ச்சி இலக்குகளையும் (SDGs) ஆதரிக்கின்றன.

sg bakap 2

இதனிடையே, எம்.பி.எஸ்.பி இன் பொதுச் சந்தை தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் பாராட்டினார். இன்றைய சிறிய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.