நடப்பு செயல்திறன் அடிப்படையில் பி.டி.சி ஊழியர்களுக்கு ஆறு மாத சம்பள போனஸ்

Admin
whatsapp image 2025 05 22 at 13.21.21 (1)

 

ஜார்ச்டவுன் – 2024 ஆம் ஆண்டு முழுவதும் மாநில நிறுவனத்தின் சிறந்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (PDC) ஊழியர்களுக்கு ஆறு மாத சம்பளம் போனஸாக வழங்கப்பட்டது.

பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டத்தில் நடைபெற்ற தொகுப்புரையில் இவ்வாறு கூறினார்.

“2024 ஆம் ஆண்டு முழுவதும் PDC ஊழியர்கள் சிறந்த சாதனைகளைப் பதிவு செய்தனர். அதன் இருப்பு மதிப்பெண் அட்டை (BSC) இல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 85 சதவீதத்தை அடைந்துள்ளனர்.

“கடந்த ஆண்டு PDC ஊழியர்களில் 25 சதவீதம் பேர் அல்லது 91 பேர் மட்டுமே போனஸ் கொடுப்பனவுகளைப் பெற்றனர்.

“இந்த ஆறு மாத சம்பள போனஸ் பல்வேறு கிரேட் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது, அதாவது உயர் நிர்வாகம் (இரண்டு பேர்), மேலாண்மை மற்றும் நிபுணர்கள் (43 பேர்) மற்றும் செயல்பாடு அதிகாரிகள் (46 பேர்) என பல பிரிவுகளாக வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழுவின் உறுப்பினரான கொன் இயோவ், வரி மற்றும் ஜகாத்துக்கு முந்தைய லாபத்தின் செயல்திறன் 2023 ஆம் ஆண்டில் PDC ரிம276.6 மில்லியனாக பதிவு செய்த வேளையில் 2024-ஆம் ஆண்டு ரிம527.1 மில்லியனாக அதிகரித்துள்ளது, என்றார்.

“இந்த எண்ணிக்கை 91 சதவீத அதிகரிப்புடன் கூடுதலாக உயர்ந்துள்ளது.

“இருப்பினும், இந்த போனஸ் தொகை சுமார் ரிம6.8 மில்லியன் அல்லது மொத்த லாபத்தில் 1.3 சதவீதம் மட்டுமே ஆகும்,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினர் சாவ் விளக்கமளித்தார்.

ஒட்டுமொத்த PDC வரவு செலவின் உண்மையான செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு போனஸ் வழங்கப்பட்டதாகவும், இது சிறந்த அடைவு நிலையை, அதாவது 104 சதவீதம் (வருவாய்) மற்றும் 96 சதவீதம் (செலவு) என்றும் கொன் இயோவ் கூறினார்.

“கூடுதலாக, ரிம8.6 மில்லியன் தொகையான கால அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் வட்டி சேமிக்கப்படுகிறது. அதோடு, மூலோபாய முதலீட்டு திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவை PDC ஊழியர்களை இந்த வெகுமதிகளைப் பெற தகுதியுடையவர்களாக திகழச் செய்கிறது,” என்று அவர் கூறினார்.