பாகான் டாலாம் தொகுதி பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – குமரன்

பாகான் டாலாம் – பினாங்கு மாநிலத் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட்,12 ஆம் தேதி அன்று நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சிய இருக்கும் வேளையில் பாகான் டாலாம் தொகுதி பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அதன் வேட்பாளர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

பாகான் டாலாம் தொகுதிக்கு வாக்களிக்க பொது மக்கள் அனைவரும் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆகஸ்ட்,12 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாகான் டாலாம் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

“இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளாக செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலராகப் பணியாற்றியுள்ளேன், நான் பாகான் டாலாம் தொகுதிக்குப் புதியவர் அல்ல, என்றார்.

“நானும் இங்குதான் பிறந்து வளர்ந்தேன். பாகான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருக்கு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளேன்.

“எனவே, இந்தத் தொகுதி எனக்குப் புதிதல்ல, இங்குள்ள தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் நான் நன்கு அறிவேன்.

“பொது மக்களின் ஆதரவினால்
பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதி பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று குமரன் கூறினார்.